பக்கம்:மாபாரதம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மாபாரதம்


தான் எதிர்த்து அம்பு விட்டால் அம்பையின் மாற்று வடிவமான சிகண்டி மீது படும் என்பதால் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தாமல் அருச்சுனன் அம்புகளுக்கு இலக்கு ஆகி நின்றான்.

“எனது இறுதி நாள் அணுகி விட்டது. உங்களால் எதுவும் செய்ய இயலாது. உங்கள் தமையனை அடைந்து அடுத்துப் போர் செய்வதற்கு ஆவன செய்யுங்கள்” என்று துரியனின் தம்பியரிடம் சொல்லி விட்டுத் தேரில் இருந்து சாய்ந்தான்.

நாரணன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு கண்ணனின் திருவடிவை நெஞ்சில் நிறுத்திக்கொண்டான். மார்பைப் பிளந்து முதுகு வழியே வெளிப்பட்ட அம்புகள் ஒரு சில பதிந்து கிடந்தன. அவ் அம்புகளைப் படுக்கையாகக் கொண்டு மல்லாக்காக விழுந்து கிடந்தான். மா வீரனான வீடுமன் சரப்படுக்கையில் சாய்ந்து கிடப்பதைக் கண்டு தேவர்கள் பொன் மயமான கற்பக மலர்களைச் சொரிந்தனர்.

தேகம் எங்கும் தங்கிய அம்புகளின் மீது உடலை வைத்து யோக சாதனையால் உயிரை ஒடாவண்ணம் நிலை நிறுத்தி உத்தராயணம் வரும்வரை உயிரோடு இருக்க முடிவு செய்தான். ஆடி முதல் மார்கழி வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம், தைமுதல் ஆனி வரை உத்தராயனம். தட்சிணாயனத்தில் உயிர்விட்டால் உயர் கதி அடையார் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே தை மாதம் பிறக்கும்வரை உயிரைவிடாமல் காத்துஇருந்தான். இவன் தந்தையாகிய சந்தனு சாகும்போது இவனுக்கு இந்த வரத்தைத் தந்து சென்றான். காலனும் இவனைக் கேட்டுக் கொண்டுதான் கணக்கை முடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/219&oldid=1046519" இலிருந்து மீள்விக்கப்பட்டது