பக்கம்:மாபாரதம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராசீ

19

என்ன செய்வான் சந்தனு நாளும் மெலிந்து நலிந்து வரும் தந்தையின் போக்கைக் கண்டு அவரைக் காக்கக் கருதினான். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தைக்குப் பெண் பார்த்தல் என்னும் செயல்” என்பதற்கு இலக்கணம் ஆகும் வகையில் யமுனைக் கரைக்குச் சென்றான்; படகோட்டியைப் பார்த்தான்; பேசினான்.

“தந்தை போனான்; தனயன் வந்தான்” என்று தனக்குள் பேசிக் கொண்டான் படகோட்டி.

“என் அன்னையைக் காண வந்தேன்” என்றான்.

பரிமள கந்தி அவனுக்குச் சிற்றன்னை ஆனாள்.

“என் தம்பியருக்குத்தான் ஆட்சி உரிமை” என்றான்

‘நீ மணக்கும் மனைவி சும்மா இருப்பானா?”

“அந்தக்கவலை உமக்கு வேண்டாம்; இனி எந்தப் பெண்ணும் எனக்குச் சகோதரியே” என்றான்.

“உன் மனைவி?”

“அப்படி ஒருத்தி வரமாட்டாள்;

நிரந்தர பிரம்மச்சரியாவேன்; இது உறுதி” என்றான்.

“துணிந்துதான் சொல்கிறாயா?”

“தீர யோசித்துத்தான் சொல்கிறேன்”.

இந்த அரிய விரதம் எடுத்தமைகண்டு விண்ணவர் வியந்தனர்; மண்ணவர் அயர்ந்தனர்; ‘யீடுமன்’ என்று இவனைப்பாராட்டி அரிய சாதனைக்கு உரியவன் என்ற பொருளில் இப்பெயரை வைத்தனர். புலன் அடக்கம் ஒரு விரதமே தவிர அதுவே முடிவு அன்று ஒழுக்கத்திற்கு ஒரு துணையே அன்றி அதுவே ஒழுக்கம் ஆகாது. இன்ப சுகம் அனைத்தையும் இழக்கத் துணிந்தான். எனினும் இஃது ஓர் அரிய சூள் உரையே. யாரும் இவ்வகையில் உறுதி படைத்தவர் ஆகார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/22&oldid=1239415" இலிருந்து மீள்விக்கப்பட்டது