பக்கம்:மாபாரதம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

217

வேண்டும். அத்தகைய நெஞ்சு உரமும் நீண்ட ஆயுளும் நிலைப்பதாக என்று கூறிச் சென்றான். வீடுமன் போர் முடியும்வரை சாகவே இல்லை; அந்நிகழ்ச்சிகளைக் கேட்டு அவற்றோடு ஒன்றிய நிலையில் தன் வாழ்வை முடித்துக் கொண்டான்.

துரியனைப்பார்த்துத் தனக்குப்பின் படைத்தலைமை கன்னனுக்குத் தந்து போர் தொடர்க என்று கூறினான்; வீடுமன் விழுந்து சாய்ந்த செய்தியைச் சஞ்சய முனிவன் திருதராட்டிரனுக்கு உரைத் தான். அதுகேட்டு அவன் “இதுவரை எனக்கு விழி போகவில்லை; இப்பொழுது தான் பார்வை இழந்தேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

8. துரோணனின் தலைமை

மறுநாள் போருக்கு யார் தலைமை வகிப்பது என்று துரியன் சிந்தித்துக் கொண்டிருந்தான். கன்னன் தான் படைத்தலைமை ஏற்பதாகக் கூறினான்; வீடுமன் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.

“நீ வெம் சமரில் படைத்தலைவன் ஆகி விட்டால் எனக்கு உற்ற துணையாக அரசர் நிலையில் இருப்பது யார்?” என்று கூறி விட்டு வேதம் கற்ற துரோணனைப் படைத் தலைவன் ஆக்கினான்.

மறுநாள் இரு திறத்துப் படைகளும் வழக்கம் போல் களத்தைச் சேர்ந்தன; தருமன் களத்தில் போரின் நிலையை விளக்கக் கண்ணனிடம் கேட்டான். கண்ணன் ‘இனி வெற்றி உறுதி’ என்று கூறினான். “கங்கை மைந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/220&oldid=1048251" இலிருந்து மீள்விக்கப்பட்டது