பக்கம்:மாபாரதம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

221


துரியனுக்குப் புதிய போர்த் திட்டம் கிடைத்தது. அதனைச் செய்து முடிப்பதே அடுத்த கட்டப் போர் என்பது முடிவு ஆயிற்று

பன்னிரண்டாம் நாட் போர்

தருமன் முன்னாள் இரவில் துரியோதனின் பாசறை யில் அவர்கள் பேசிக் கொண்டதை ஒற்றரால் அறிந்து அதைக் கண்ணனுக்கும் விசயனுக்கும் சொல்லிப் போரில் புகத் தும்பைமாலை சூடிக் கொண்டான். பாண்டவர்களின் சேனைத் தலைவனான திட்டத்துய்மன் படைகளை வியூகமாக அமைத்தான். பின்புறத்தில் வீமனையும், அணி வகுப்பில் முக்கியமான இடங்களில் மணி முடி தரிதத மன்னர்களையும், இரு புறத்திலும் நகுலனையும் சகா தேவனையும், முன்புறம் அபிமன்யுவையும் அருச்சுனனையும் நிறுத்த நடு இடத்தில் தருமன் இருந்தான்.

கவுரவர் சார்பில் முன்னிரவு பேசியபடி திரிகர்த்த குலத்தலைவனும் சம்சப்தக சிர்லரும், துரோணன் முதலிய எனையவரும் கூடி வந்து கருட வியூகமாகப் படைகளை அணி வகுத்தனர்.

திரிகர்த்த குலத்தலைவனும், நாரண கோபாலர் என்னும் நர அதிபர்களும் முன் நின்ற விசயனைப் போருக்கு அறை கூவி அழைத்தனர். விசயனின் வீரத் தைத் தரக் குறைவாகப் பேசினால் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவனை இழித்துப் பேசிப் போருக்கு அழைத்து வீரம் பேசினர்.

ஆரவாரம் செய்து அழைக்கும் அவர் குரல் கேட்டு “நீர் சற்றுத் தருமனைக் காத்திடுங்கள்” என்று வீமனி–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/224&oldid=1048255" இலிருந்து மீள்விக்கப்பட்டது