பக்கம்:மாபாரதம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மாபாரதம்

டமும் மற்றவர்களிடமும் சொல்லிவிட்டுத் தருமனிடம் சொல்லி அனுமதி பெற்று அவர்களை நோக்கிப் பார்த்தனாகிய விசயன் கண்ணனோடு களம் நோக்கிக் சென்றான்.

அதற்குப் பிறகு சயத்திரதன் முதலாகிய வேந்தர்கள் சூழ்ந்து வரவும், முரசங்கள் இடி போல முழங்கி ஒலி எழுப்பவும், யானை, குதிரைப்படைகள் சூழ்ந்து வரவும் துரோணன் தேர் ஏறிக் களத்தில் வந்து சேர்ந்தான். இருதிறத்துச் சேனைகளும் வெற்றி தோல்வி இன்றித் தாக்கிக் கொண்டனர். திட்டத்துய்மன் அம்புகளை மழை போல் பொழிந்தான். துரோணன் திட்டத்துய்மன் கை வில்லை அறுத்து எறிந்தான். துரோணனும் தருமனும் நெருங்கிப் போர் செய்தனர். தருமனோ துரோணனை மிகவும் கடுமையாகத் தாக்கினான். துரோணன் தணர்ந்து விட்டான்.

இதை அறிந்து துரியோதனன் களம் புகுந்தான். தோற்றுப் பின் வாங்கிய வீரர்களை ஊக்குவித்து முன் னேறுமாறு பணித்தான்; அபிமன்யு தனி ஒருவனாக நின்று அவர்கள் தலைகளைப் பந்தாடினான். களம் செம்மண் ஆகிச் சிவந்தது; துரோணன் தருமனின் வில்லுக் குத் தோற்றுக் களத்தினின்று நீங்கினான். அந்நிலையில் துரியனுக்குத் துணையாகப் பகத்தத்தன் களம் புகுந்தான். கண்ணனின் துணைகொண்டு விசயன் தான் போரிட்ட களத்தினின்று வந்து கண்ணன் தந்த அம்பால் அவன் உயிரைப் போக்கி அவன் ஏறி வந்த சுப்ரதீபம் என்ற யானையையும் ஒழித்தான்.

அதனைத் தொடர்ந்து நடந்த போரில் தருமனுக்குச் சகுனி தோற்றுப் பின் வாங்கினான்; சூது போரில் வென்ற–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/225&oldid=1048256" இலிருந்து மீள்விக்கப்பட்டது