பக்கம்:மாபாரதம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

223

வன் மோது போரில் வெல்ல முடியாமல் போய் விட்டது. அதனைத் தொடர்ந்து வீமனோடு துரியன் தம்பியர்மோதி ஒரு சிலர் படுகாயம் அடைந்தனர். சகுனியின் பிள்ளைகள் சிலர் மாண்டனர்.

பாசறை சென்று துரியன் துரோணனை மிகவுப் கடிந்துகொண்டான். அவனைத் தொடர்ந்து கன்னனும் சாடினான்.

வேதம் ஒதும் அந்தணன் என்பதை அவன் செயலில் காட்டி விட்டான். தருமனைக் கைப்பிடித்துத் தருவதாகக் கூறிய சொல்லைக் காற்றில் பறக்க விட்டான்” என்று கன்னன் இகழ்ந்து கூறினான்.

துரோணன் மானம் மிக்கவனாய்க் கடுஞ் சொற்கள் கூறினான்.

“கன்னன் மட்டுமல்ல, தருமன் முன் நிற்கக்கூடியவீரர் யார் இருக்கிறார்கள் சொல்லமுடியுமா? இதுவரை வன் மைக்கு வீமன்; வின்மைக்கு விசயன் என்று உலகம் பாராட்டி வந்தது. தருமனுக்கு நிகர் யாரும் இல்லை என்பது நேற்று நடந்த போரில் கண்டு கொண்டேன். அவனை நேருக்கு நேர் நின்று பொருது வெல்லும் வீரர் இருந்தால் அவனை மாவீரன் என்று சொல்லிப் பாராட்டு வேன்; அத்தகைய வீரன் இருந்தால் அடுத்த நாள் நடக்க இருக்கும் போரில் முன் வரலாம்” என்று சொல்லி விடை பெற்றான், அனனவரும் அன்று உறக்கத்தில் அமைதி தேடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/226&oldid=1047221" இலிருந்து மீள்விக்கப்பட்டது