பக்கம்:மாபாரதம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மாபாரதம்


விசயனின் மகன் தனித்துச் சென்று பகைவர் புறமுதுகிடப் போரில் இறங்குவதைக் கண்டு வீமன் துடிதுடித்துப் போனான். பால் மணம் மாறாத பாலகனைப் படுகளத்துக்கு அனுப்பி வைத்துப் பாராமுகமாக இருக்க விரும்ப வில்லை; அவனுக்குத் துணையாகச் சென்று பகைவரைப் பதம் பார்க்கத் தருமனிடம் இதமாக அனுமதி கேட்டான். அவனால் மறுக்க முடியவில்லை. அபிமன்வியூகத்தை முறிக் கக் கற்றவன். வழி அறிந்து திரும்பக் கற்றிலன். ஆதலின் வீமன் செல்ல வேண்டியது அவசியம் எனப்பட்டது.

மண்டலாதிபர்களையும் மாமன்னர்களையும் துணை யாகக் கொண்டு பகைவரை எதிர்க்கச் சென்றான். சக்கர வியூகம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல் ஆகியது. வானத்தில் வட்டமிடும் கருடன் முன் அரவுகளின் கூட்டம் போல அவர்கள் ஒட்டம் பிடித்தனர். கலிங்கர், சோனகர், மகதர், கன்னடர், கங்கர், கொங்கணர், கவுசலா, தெலுங்கர், ஆரியர், குலிங்கர், பப்பரர், சீனர், சாவகர், சிங்களர், குலிங்கர், மாளவர் முதலிய சிற்றரசர் பலரும் வெற்று வேட்டு ஆயினர். வீமன் முன்னும் அபிமன் முன்னும் துரியன் படைகள் நிற்க முடியாமல் வெட்கம் அடைந்து வேதனையோடு ஒடி ஒளிந்தன

துரியன் வாழ்க்கையையே வெறுத்து விட்டான்; சயத் ரதனைப் பார்த்து இகழ்ச்சிக் குறிப்பாக அவன் போராற் றலை இகழ்ந்து கூறினான். “மன்மதனைப் போன்ற தோள்கள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? வீட்டு மாப்பிள்ளையாக இருக்கலாம். வீர மாமகனாக இருக்க முடியாது; படை இயக்குவது எப்படி என்று அறிந்து இருக்க வேண்டும். கத்தியைத் தீட்டினால் மட்டும் போதாது; புத்தியைத் தீட்ட வேண்டும். அப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/229&oldid=1047227" இலிருந்து மீள்விக்கப்பட்டது