பக்கம்:மாபாரதம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

227

தான் எதிரியை அழிக்கும் சக்தியைப் பெறமுடியும்” என்றான்.

மைத்துனன் பேசுவது நகைச்சுவையா என்பது தெரியாமல் திகைத்தான். “வீடுமனும் அபிமனும் சேர்ந்து விட்டார்கள். இரண்டு கை தட்டினால் ஓசை கிளம்பும்; அவர்களைப் பிரித்து வைக்க வேண்டும். அபிமன்யுவுக்கு வீமன் துணையாக வரக் கூடாது; உபாயம் சிந்தித்துப் பார்” என்றான்.

“வயதில் இளைஞராக இருந்தால் வாலிப மங்கையை அனுப்பி வைத்தால் எச்சில் இலைக்குப் போராடும் நாய்களாக மாற்றலாம். தந்தையும் மகனுமாக இருக்கிறார்களே எப்படிப் பிரிக்க முடியும்” என்று கேட்டான்.

சயத்ரதன் இதற்குமுன் சிவனிடம் சென்று தவம் செய்து பாண்டவரை வெல்ல வரம் தர வேண்டும் என்று வேண்டியிருக்கிறான். “கண்ணன் இருக்கும்வரை அவர்களை வெல்லமுடியாது” என்றும், “வேண்டுமானால் விசயன் ஒழிந்து ஏனைய நால்வரை ஒருநாள் பிரித்து வைக்க இயலும்” என்றும் கூறித் தலைமாலையைத் தந்து அருளினார். கதாயுத ஒன்றும் தந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அருளினார். இச்செய்தி துரியனுக்குத் தெரியும். அதைச் சொல்லிக் கொன்றை மாலை கொண்டு வீமனையும் அபிமன்யுவையும் ஒரு நாள் பிரித்து வைத்தால் போதும் என்று வழிகாட்டித் தந்தான்.

சயத்ரதனும் அதற்கு இசைந்து களத்தில் நுழைந்தான்.

வீமன் கணையால் பகைவர் சிதைந்தனர். அவன் அபிமன்யு இருக்குமிடம் வரும்போது சிவன் அணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/230&oldid=1047228" இலிருந்து மீள்விக்கப்பட்டது