பக்கம்:மாபாரதம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மாபாரதம்

கொன்றை மாலையைச் சயத்ரதன் இட்டு வைத்தான் அபிமன்யுவைச் சுற்றிலும் வட்டமிட்டது போலத் திட்டமிட்டு இக்கொன்றை மாலையைப் பரப்பி வைத்தான்.

“இன்று அமரில் யார் உயிர் விடுவதாயினும் ஈசன் அணியும் கொன்றை மாலையைக் கடவேன்” என்று உறுதியோடு நின்றான் விமன்.

“சிந்துபதியாகிய சயத்ரதன் தேன் மாலையை இட்டுச் சிறுவன் உயிரை மாய்ப்பதா! வீரம் பழுதாக்கி விட்டானே! இந்தக் கீழ்மைக்கு எல்லாம் காரணம் துரியனாகத்தான் இருக்க வேண்டும்” என வீமன் மனம் நொந்து பேசினான்.

“அபிமன் ஆற்றல் உடையவன்; கூற்றுவனும் அஞ்சும் பேராண்மை உடையவன். அவனை இவர்களால் வெல்ல முடியாது” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

அபிமன்யு படைக்கடலின் மத்தியில் வடவைக் கனல் போல் நின்றான்; பிறர் அஞ்சி அணுகாமல் விலகினர். யாளி என நின்ற மீளியாகிய அவனை வாளிகள் பல போட்டு வருத்தினர்; கூளிகள் நடம் செய்தன.

அஞ்சி ஒடிய கன்னன் மீண்டும் துணிந்து அபிமன்யுவை வந்து எதிர்த்தான். அங்கர்பதியாகிய கன்னனின் தேரில் இருந்த குதிரைகள் நான்கும் செத்து ஒழிந்தன. அவன் வில்லையும் கொடியையும் அழித்து அங்கு நிற்க ஒட்டாமல் அடித்து ஒழித்தான். இரவியின்மகனான கன்னன் ஏகுதலும் அரவக் கொடியவரின் தம்பியர்கள் வந்து சூழ்ந்தனர். அவர்களும் முகவரி இல்லாமல் முகம் மறைந்து ஒடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/231&oldid=1047230" இலிருந்து மீள்விக்கப்பட்டது