பக்கம்:மாபாரதம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

229

ஒளித்தனர். இவ்வாறே அசுவத்தாமனும் நிற்க முடியாமல் அவதியுற்றான். துரோணனும் தோல்வியைச் சந்தித்தான்.

துரியனின் தம்பியான துன்முகனும் சல்லியனும் அவன் மகன் உருமித்திரனும் சூழ்ந்தனர். துன்முகன் தன் முடியை இழந்தான்; சல்லியன் மைந்தன் வானுலகு அடைந்தான்; தந்தை சல்லியன் புறமுதுகிட்டான். மாவீரர் பலர் உடைந்து ஓடினர்.

வியூகத்தின் நடுவில் அபிமன்யு தனித்து நின்றான். துரியனின் மகன் இலக்கணன் இயமனை எதிர்க்கக் களத்தில் இறங்கினான். இருவரும் சொற்போரும் விற்போரும் இயற்றி இறுதியில் இலக்கணன் துறக்கம் புக்கான்.

துரியன் கண்ணிர் விட்டுக் கலங்கி அழுதான். அபிமன்யுவைப் பழிக்குப் பழியாக அழிக்காவிட்டால் தன் வாழ்வை முடித்துக் கொல்வதாக முடிவுரை கூறினான். துரோணனும் அசுவத்தாமனும் தத்தம் வீரர்களோடு அபிமன்யுவைப் புலிகள் சூழ்வது போல வந்து சுற்றிக் கொண்டனர். துரியன் கன்னனைப் பார்த்து இப்போர் எளியது அன்று விசயன் வந்து இவனோடு சேர்ந்து விட் டால் நிலைமை என்ன ஆகும்” என்று கூறிச் செயலுக்குத் துரண்டினான். எனினும் அபிமன்யுமுன் நிற்காமல் தேரும் வில்லும் முறிய மனக் கலக்கத்துடன் கன்னன் பின்னிட்டான். துச்சாதனன் தன் தேரில் மீண்டும் ஏறி அபிமனைத் தாக்கினான். அவனுடைய தேரையும் வில்லையும் முறித்து விட்டான். வாளும் கேடயமுமாகப் பாய்ந்து எதிரிகளைத் தாக்கினான்.

அபிமனது தேர், குதிரை, வில் இவை அனைத்தும் போய்விட்டன போர்த்தொழிலும் போய்விட்டது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/232&oldid=1047232" இலிருந்து மீள்விக்கப்பட்டது