பக்கம்:மாபாரதம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மாபாரதம்

அனைத்தும் அழிந்து விட்டன. இனி எளிதில் அவனை வீழ்த்தி விடலாம் என்று முழங்கிக் கொண்டு எல்லோரும் ஒன்றுபட்டு அவனைத் தாக்கச் சென்றனர். படை அற்றவனைக்கொல்லுதல் பழி என்றும் பாராது துச்சாதனன் மகன் துச்சனி என்பவன் நச்சு அரவம் போன்று அவனை அணுகினான். அவன் தொடுத்த கணையை வாளால் துணித்து அவனது முடியையும் வீழ்த்தினான். துரோணன் அம்பு கொண்டு அவனைப் பலமுறை தாக்கினான். அபிமன் வாளைக் கொண்டே அவன் தேர்களையும் வில் களையும் முறித்து வீழ்த்தினான். மீண்டும் தேரில் வந்து துரோணன் அவன் வலது தோளை அம்பு கொண்டு துணித்து வீழ்த்தினான். தேர்ச்சக்கரம் ஒன்றைக் கழற்றிப் பகைவரை அழிக்கும் சக்கராயுதமாக மாற்றிப் பகைவரை அழித்தான். ஒரு கையைக் கொண்டே மறுகையோடு போர் செய்யும் இவன் ஆற்றலைக்கண்டு வியந்து பொழுது சாய்வதற்கு முன் இவனைச் சாய்ப்பது அரிது என்று கருதித் துரியன் சயத்ரதனை வருமாறு அழைத்தான்.

சயத்ரதன் சிவன் அளித்த கதையைக் கொண்டு இவன் கதையை முடிக்க வந்து சேர்ந்தான். அபிமனும் சக்க ரத்தை எறிந்து விட்டுக் கீழே விழுந்து கிடந்த மற்றோர் கதாயுதம் கொண்டு சயத்ர தனைத் தாக்கினான். அபிமன் மிகவும் தளர்ந்து விட்டான். அபிமன் சயத்ரதன் உயிர் நிலை அறிந்து கதை கொண்டு தாக்க அவன் உடல் நெரி நெரிந்தது. அவன் சிவ மந்திரம் சொல்லித் தன் கைக் கதையால் அபிமன் தலையைத் தாக்கத் தலை, அறுபட்டுச் சரிந்து விழ இரத்தம் பீறிட்டு அவன் சரிதத்தைச் சிவப்பு மையால் எழுதி முடித்தது.

துரியன் தன் மகன் இலக்கணன் மடிந்ததற்குக்கூட வருத்தப்படவில்லை. வீர அபிமன்யு கோர நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/233&oldid=1047233" இலிருந்து மீள்விக்கப்பட்டது