பக்கம்:மாபாரதம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

233


பாசறை வந்ததும் பேச்சுரை இன்றி மவுனம் நிலவியது. அழுகை மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.

“அழுகையின் காரணம் என்ன?” என்று கேட்டான் விசயன். கண்ணன் வாய் திறந்து பேசவில்லை. அவன் கண்களினின்று விழுந்த முத்துப் போன்ற நீர்த்துளிகள் சத்தமிட்டுப் பேசின.

கண்ணன் காலடியில் விழுந்து “என் கண்ணும் தோளும் மார்பும் இடப்பக்கம் துடிக்கின்றன. உன் பார்வையும் அவலம் பேசுகிறது. இன்றைய போரில் இறந்தது என் துணைவரோ புதல்வரோ கூறுக” என்றான்.

“வீரமரணம் எய்தியது என்மருமகன் அபிமன்” என்று கூறி அவனை இறுக அணைத்துக் கொண்டு நடந்ததை விவரமாகச் சொன்னான்.

அவன் அயர்ந்து சோர்ந்து பொலிவிழந்து துடித்து விம்மி விம்மி அழுதான்.

இது அபிமனுக்குச் செய்யும் வீர அஞ்சலியாகியது.

“சிதையிட்டு அதில் எனக்கும் இடம் விட்டுத் தகனம் செய்க” என்றான். அந்தண வடிவில் இந்திரன் மறுபடி யும் வந்து சந்திரகுலத்து அரசனாகிய விசயனைப் பார்த்து வினவினான்.

“மகன் இறந்தற்காகத் தந்தை மரணம் அடையலாமா?”

ஞான ஒளி பெறத் தீபம் ஏற்றி வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/236&oldid=1048259" இலிருந்து மீள்விக்கப்பட்டது