பக்கம்:மாபாரதம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மாபாரதம்


தான் அவனுக்குச் சத்தியம் செய்து தந்தது நினைவுக்கு வந்தது.

அதற்கு மேல் அவனால் வாதம் செய்து கொண்டிருக்க முடியவில்லை. சோகம் அடங்கியது; ஆனால் பழி தீர்க்க வேண்டும் என்ற வேகம் தொடங்கியது.

வீரமணம் என்றால் அதற்கு வருந்தத் தேவையில்லை; அஞ்சலி செய்து விட்டு அமரனாகி விட்டான் என்று அமைதி கண்டிருக்கலாம். இது கோர மரணம்; வீமனைப் பிரித்துவிட்டுச் சிறுவன் ஒருவனை வளைத்துப் போட்டு ஆளுக்கு ஒரு அடி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதற்குத் துணையாக நின்றவன் சயத்திரதன்.

விசயனுக்கு அறிவு கூறி ஆக்க வழியில் திருப்ப வியாச முனிவன் வந்தான். அருச்சுனனுக்கு ஞான உபதேசம் செய்து பாச பந்தத்தால் மனம் தெளிவு இழப்பது தவறு என்பதை எடுத்துக் காட்டினான். சாவு என்பதற்குச் சொந்தக்காரர்கள் இன்னார் தான் என்று வரையறுத்துக் கூற முடியாது. அதற்குக் காரணம் என்ன? யார் இதற்குப் பொறுப்பு? அவர்களைக் களைவது எப்படி என்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்று அறிவுரை கூறி விடைபெற்றுச் சென்றான்.

ஞானபண்டிதனாகிய வியாசன் சென்ற பின்பு அவனுக்குரிய இயல்பான மான உணர்வு நிதானத்தை இழந்தது. மறுநாள் பொழுது சாய்வதற்குள் சயத்திரதனைக் கொன்று முடிப்பதாகவும், தவறினால் தன் உயிரை முடித்துக் கொள்வதாகவும் வீர சபதம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/237&oldid=1047239" இலிருந்து மீள்விக்கப்பட்டது