பக்கம்:மாபாரதம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

235


அதன்பின் கண்ணனை அழைத்துக் கொண்டு கயிலை சென்று சிவனை வேண்டி மற்றோர் வில்லையும் அம்பையும் பெற்று வந்தான்.

விசயன் செய்த வஞ்சினமும் அவன் கயிலை சென்ற நோக்கமும் அறிந்து தருமன் யுத்த தருமத்தைப் பற்றிச் சிந்தித்தான்.

பகைவர்களுக்கு விசயனின் சூளுரையை உரைத்தபின் அமர் தொடங்குவது அறம் என்று நினைத்தான். சயத்தி ரதன் விசயனின் இலக்கு என்பதையும், மாலைப்பொழுது முடிவதற்குள் அவன் மரணம் காத்திருக்கிறது என்பதை யும் முன் கூட்டிச் சொல்லிவிட வேண்டும் என்றும் துடித்தான். முன்கூட்டி உரைப்பது அரசியல் அறம் என்றுமுடிவு செய்தவன் கடோற்சகனை அனுப்பிச் செய்தி சொல்லுமாறு பணித்தான்.

கடோற்சகன் துரியனின் பாசறைக்குச் சென்று சயத்திரனுக்குப் பாசக்கயிறு காத்திருக்கும் செய்தியைச் சொல்லினான். அன்று இரவு உறக்கம் கலைந்தது. அடுத்த நாள் செய்வது குறித்து ஆலோசனை செய்தனர். துரோணன், கன்னன், அசுவத்தாமன் முதலியவரைத் துரியன் அழைத்து எப்படித் தடுப்பது என்று அவர்கள் அறிவுரை கேட்டான்.

“நாளை ஒரு நாள் நாம் சயத்திரதனைக் காப்பாற்றி விட்டால் நாம் வீரன் ஒருவனைக் காத்தவர் ஆவோம். தங்கை துச்சளையின் பூவும் பொட்டும் கலைக்காமல் காப் பாற்றப்படும். அதுமட்டுமல்ல; சுபத்திரை அமங்கலியாவது உறுதி. பொழுது சாய்வதற்குள் சயத்திரதனைக் கொல்லாவிட்டால் விசயன் உயிர் விடுவது உறுதி. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/238&oldid=1047281" இலிருந்து மீள்விக்கப்பட்டது