பக்கம்:மாபாரதம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மாபாரதம்

மற்றைய பாண்டவர் சாவுக்குக் காரணம் ஆகும். அவர்களும் உயிர் மாய்த்துக் கொள்வர். பாரதப்போர் பதினான்காம் நாளிலேயே முடிந்துவிடும். வெற்றி நமதே” என்று முழக்கம் செய்தான்.

துரோணன் கைதட்டிப் பாராட்டுத் தெரிவிக்க வில்லை. “என்னால் முடிந்தவரை காப்பேன்; அதற்குத் தக்கபடி படைகளை வைப்பேன்; விதியின் செயல் அதனை முன்கூட்டி உரைக்க முடியாது. இறுதிவரை போராடுவோம்” என்றான்.

கன்னன், துரியனின் தம்பி துன்மருடணன், அசுவத் தாமன் ஆகிய மூவரும் உறுதியாகச் சயத்திரதனைக் காப்ப தாக உறுதி கூறினர். அதற்குப் பின் கடல் அலைகள் ஒய்வு கொண்டன; உறக்கம் அவர்களை அடக்கி வைத்தது.

சயத்திரதன் வதம் (பதினான்காம் நாட்போர்)

தருமன் காலைக்கடன் முடித்து விசயனது வீர சபதத்தை நிறைவேற்றும் பொருட்டுப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான். கண்ணன் தேர் நடத்த வீமனும் நகுல சகாதேவர்களும் மற்றுமுள்ள அரசர்களும் இருபுறமும் நெருங்கிவர விசயன் முன்னோக்கிச் சென்றான். துருபதன் மகன் திட்டத்துய்மன் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து மற்றோர் முகமாக முன்னேறினர்.

அவ்வாறே இருபது யோசனை வித்தாரமுள்ள இடத்தில் சயத்திரதனை மத்தியில் நிற்கச் செய்து சுற்றியும் படைகளைத் துரோணன் நிறுத்தினான். சயத்திரதனைக் காப்பதாக வீரம் பேசிய துன்மருடணனைத் தூசிப் படை–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/239&oldid=1048261" இலிருந்து மீள்விக்கப்பட்டது