பக்கம்:மாபாரதம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

237

யின் முன் நிறுத்திக் கன்னன் சகுனி இருவரையும் காப்பு அணியாகப் பின் நிறுத்தி ஐந்து ஐந்தாக ஐவகை வியூகம் ஆகியசேனையின் சிரத்தில் துரியனை நிறுத்திச் சகட துண் டத்தின் முன்பு துரோணன் நின்றான். அந்தணன் ஆகிய துரோணன் அணிவகுத்த திறமையைக் கண்டு சயத்தி ரதனை விசயன் ஒரு பகலில் அழிக்க முடியாது என்று தேவர்கள் பேசிக் கொண்டனர்.

கைத்தலத்துள்ள பொருளை இறுகப் பிடித்துக் காத்தல் போல சயத்திரனைக் காத்து நிற்றலைப் பார்த்து விசயன், உத்தமோசா, உதாமன் முதலியோர் இருபுறமும் வரக் கண்ணன் முன்னே செல்ல அவன் சுட்டிக்காட்டிய பகைவரைத் தாக்கினான். விசயனின் வில் ஒலிக்கே கலங்கி நீர் ப் பெருக்கின் முன் உடையும் கழனிகளின் கரைகளைப் போல எதிரிகளின் சேனைகள் உடைந்து சிதற விசயனின் சேனைகள் துரோணளிைடம் போய்ச் சேர்ந்தன.

துரோணனும் விசயனும் அம்புகள் விட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அம்புகள் மோதிக் கொண்டு யார் மீதும் படாமல் வழியிலேயே துணிபட்டன.

“ஐயனே! நான் உன் திருவடி போற்றும் மாணவச் சிறுவன்; எனது வஞ்சினம் தவறாமல் நிறைவேற அருள் செய்க” என்று அடக்கத்தோடு கூறித் துரோணனின் வேகத்தைக் குறைத்தான்.

அவனும் தடை செய்யாமல் முன்னேற வழிவிட்டான். அடுத்தது கன்னன் மலைபோல் நின்று குறுக்கிட்டான். இருவரும் சளைக்காமல் போரிட்டுக் கொண்டனர். இவ னோடு போர் செய்வதில் நேரம் கழிவதைக் கண்டு விசயன் அம்புகளை ஆவேசமாகப் பொழிந்தான். கன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/240&oldid=1047283" இலிருந்து மீள்விக்கப்பட்டது