பக்கம்:மாபாரதம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மாபாரதம்

ஏறச்சொல்லி அத்தினாபுரி நோக்கிச் சென்றான். ஒருத்தியோடு போகாமல் மூவரோடு போனது மற்றைய மன்னர் மைந்தர்களுக்கு எரிச்சல் ஊட்டியது.

வீடுமனை மடக்கிப் போர் தொடுத்தனர். அவர்கள் குறைக்காற்று முன் இலவம் பஞ்சு ஆயினர். சாலுவ மன்னன் ஆகிய பிரமதத்தன் என்பவன் மட்டும் தொடர்ந்து போர் இட்டான். விற்போரில் முற்றிய கலைஞனான வீடுமன் அவனை முறியடித்து முதுகு காட்டச்செய்தான், சாலுவனின் பேரழகும் வீரமும் அம்பிகையைக் கவர்ந்தன. அவள் அவனை மணம் செய்து கொள்ள விரும்பினாள்.

அவள் நெஞ்சில் மற்றொருவன் குடி கொண்டிருந் ததை அறிந்த வீடுமன் அவளைச் சிறைபடுத்த விரும்ப வில்லை. பெண்ணைத் தொடாதவன் ஆயினும் அவள் உரிமையை மதித்தான். அவளுக்கு விடுதலை தந்தான்.

கூண்டில் சிறைப்பட்ட புறா விண்ணில் பறந்தது. சிபிச் சக்கரவர்த்தி அடைக்கலம் தர மறுத்துவிட்டான்; “வீடுமனிடம் சிறைப்பட்ட நீ அவனையே மண்க்க வேண்டும்” என்று சாலுவன் வீர மரபு பற்றிப் பேசினான்; மறுபடியும் அத்தினாபுரம் நாடி வந்தாள். தன்னை வீடுமனை மணந்து கொள்ளும்படி வினயமாக வேண்டினாள். அவன் தன் விரதத்தைப் பொய்ப்பிக்க முடியாதே என்று அவளிடம் வாதாடிப் பார்த்தான். அவன் மறுக்க அவனை எப்படியும் மணப்பது என்று அவள் மன உறுதி கொண்டாள்.

வில்வித்தை பயில்வித்த ஆசான் பரசுராமனிடம் சென்று அவள் முறையிட்டாள். குறை கேட்ட அவன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/25&oldid=1048268" இலிருந்து மீள்விக்கப்பட்டது