பக்கம்:மாபாரதம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

249

ஓட்ட அழைத்தேனே தவிரப் போர் ஓட்டத்தைப் பற்றிப் பேச நான் அழைக்கவில்லை” என்றான்.

உடனே அவன் தேரை விட்டுக் கீழே இறங்கிவிட்டான்.

“எலியின் இரைச்சல் எல்லாம் பூனையைக் கண்டு அடங்கிவிடும்” என்று கூறினான் சல்லியன். ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போருக்கு நின்றனர். துரியன் இடை மறித்துச்சமாதானம் செய்தான். சல்லியன் தேர் ஏறினான்.

வீமனும், நகுலனும், தருமனும் கன்னனை எதிர்த்து அவன் வில்லுக்கு ஆற்றாமல் பின் வாங்கினர். இறுதியில் விசயனும் கன்னனும் நேருக்கு நேர் நின்று எதிர்த்தனர்.

கன்னனும் விசயனும் மாறி மாறிச் சரகூடங்கள் அமைத்தனர். சரகூடத்தில் அகப்பட்ட கன்னன் வலையில் அகப்பட்ட மான் ஆனான். அவனுக்கு எதிரே நின்ற தனஞ்சயனும் தளர்ந்து செயவிழந்து நின்றான்.

கன்னன் விசயனின் கண்களுக்குத் தருமனைப் போலத் தோன்றியதால் தளர்ச்சி அடைந்தான். இதைத் தெரிந்து கொள்ளாமல் தருமன் “பகல் முடிந்தும் பகையை முடிக்க வில்லை. உன் கைவில் இனிமேல் என்ன செய்யப் போகிறது?” என்று அவன் வில்லைக் கடிந்து உரைத்தான்.

“என் அம்பினைக் குறை கூறுபவர் உயிர் முடிக்காமல் விடேன்” என்று வில்லை வளைத்து நாண் பூட்டி விட்டான் விசயன். உடனே கண்ணன் ஒடோடி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/252&oldid=1047354" இலிருந்து மீள்விக்கப்பட்டது