பக்கம்:மாபாரதம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மாபாரதம்

தடுத்து “அமைக என்று கூறி அவனைத் தழுவிக்கொண்டு பெரியோர்களை நீ என்று சொன்னாலும் அது கொல்லு தலைக் காட்டிலும் கடுமையான தண்டனை யாகும். நீயும் தரக்குறைவான சொற்களைக் கொண்டு அவனைத் தாக்கலாம்” என்றான்.

அவ்வாறே நாவால் சொல்லத்தகாத சொற்களைக் கொண்டு தரக்குறைவாகச் சில சொற்கள் பேசினான். தருமனும் வாழ்க்கையை வெறுத்துத் துறவுக்கோலம் பூண்டான். கண்ணனும் விசயனும் மன்னிப்புக் கேட்டு அவனைச் சமாதானப்படுத்தினர்.

அதற்குப் பிறகு கன்னனுக்கும் அருச்சுனனுக்கும் கடும் போர் நடந்தது. நாகக் கணையை அருச்சுனனின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்துக் கன்னன் ஏவினான். கண்ணன் தன் கால் விரலால் தேரினைக் கீழே அழுத்தி அவன் விட்ட அம்பு தலை முடியை இடறுமாறு செய்தான். அந்த நாகம் மறுபடியும் தன்னை ஏவும்படி கன்னனை மன்றாடியது. மறுமுறை விடமுடியாது என்றும், வீரனுக்கு அது அழகல்ல என்றும் கூறி மறுத்து விட்டான். அந்த நாகம் வாழ்க்கையை வெறுத்துச் சுருண்டு உயிர் நீத்தது.

சல்லியனும் இதே கருத்தைக் கூறினான். மார்பைக் குறிவைத்து அம்பு ஏவியிருக்க வேண்டும் என்றும், மறு முறை அரவக் கணையை ஏவுவது தான் அவன் செய்யக் கூடியது என்றும் அறிவுறுத்தினான். கருத்து வேறுபாடு அவர்களைப் பிரித்தது. சல்லியன் தேரை விட்டு இறங்கி விட்டான்.

கன்னன் அந்தத் தேரைத் துக்கி நிறுத்த அரும்பாடு பட்டான். அத்தேரின் இடப் பக்கச் சக்கரம் ஒரு பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/253&oldid=1047355" இலிருந்து மீள்விக்கப்பட்டது