பக்கம்:மாபாரதம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

251

சரிந்துவிட்டது; அந்த நிலையில் அவன் தனியனாக விடப் பட்டான்.

அவன் உயிரைக் காத்து வந்தது அவன் இதுவரை செய்துவந்த புண்ணியம் ஆகும், அதனை விலக்கினால் தான் அவன் உயிரை நீக்கமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

கண்ணன் அருச்சுனனைச் சற்றுப் போரை நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கி முதிய அந்தணனாகக் கன்னன் முன் சென்றான்.

“மேருமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறேன்; இல்லாதவர்க்கு நீ வழங்குகின்றாய் என்று கேள்விப்பட் டேன்” என்றான்.

“நன்று” என நகைத்து “தரத்தகு பொருள் நீ நவில்க” என்றான்.

“உன் புண்ணியம் அனைத்தும் தருக” என்று கேட்டான்.

“குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கின்ற என்னிடம் இந்தப் புண்ணியம் தான் எஞ்சி இருக்கிறது; அதையாவது கொடுத்துதவும் நிலையில் இருக்கிறேன் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான்.

“நீர் வார்த்துத் தருக” என்றான். கண்ணிரைத் தவிர வேறு நீர் காண முடியாத அந்தச் சூழ்நிலையில் அவன் தன் புண்ணிரைத்தான் காணமுடிந்தது; இதயத்தில் அம்பு தைத்து இருந்தது. அதைப் பிடித்து இழுக்கக் குருதி கொப் புளித்ததும் அதனைக் கொண்டு தான் ஈட்டிவைத்த புண் னியம் அனைத்தும் தாரை வார்த்துத் தானமாக ஈந்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/254&oldid=1047356" இலிருந்து மீள்விக்கப்பட்டது