பக்கம்:மாபாரதம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

253


“சூரியன் அத்தமனம் ஆகும் முன்பு கன்னனைக் கொல்வாய்” எனக் கண்ணன்கூற அருச்சுனன் அஞ்சரீகம்” என்ற கணையைக் கன்னனின் மார் பில் வீச அது கவிஞர்களின் கூரிய சொல் போலப் பாய்ந்து அவன் உயிரைப் போக்கியது.

அந்திபடிவதற்கு முன் அவன் ஆவி நீங்குதல் உறுதி என்று அசரீரி சொல்லக் குந்தி செயலிழந்து கண்ணிர் சோரக் குழல் சரியக் களத்தை அடைந்தாள். கோ என்று கதறி இரு கைகளையும் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அவன் உடம்பின் மேல் விழுந்து அழுதாள்.

பிறந்த போது உன்னைப் பேணி வளர்க்கும் பேற் றினை இழந்தேன்; பேழை ஒன்றில் உன்னை வைத்து ஆற்றில் விட்டு உன்னை அநாதையாக்கினேன்; ஐவரும் நூற்றுவரும் அடிபணிய நீ அரசாளும் பெற்றியை யான் காணவில்லை” என்று சொல்லிச் சொல்லிக் குந்தி அழுதாள்.

“என் உயிர்க்கு உயிராகிய தோழனாகிய உன்னை இழந்தேன். இனி யாரைக் கொண்டு அரசாள இருக்கின்றேன்” என்று துரியன் கூறி அழுதான். உடன் பிறந்த தம்பியரும் அழுது வருந்தினர்.

கன்னனின் பிறப்பை மறைபொருளாகக் காத்து வைத்த அன்னையின் கொடுரச் செயலைப் பாண்டவர் கண்டித்துப் பேசினர்; “பெண்கள் ரகசியத்தை வைத்து இருக்கக் கூடாது; அவர்கள் வெளியே சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிட வேண்டும்” என்று கடுமொழி கூறினான் தருமன்; அது முதல் பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லை; அவர்களால் காப்பாற்ற முடியாது என்ற சொல் வழக்கும் ஏற்பட்டுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/256&oldid=1047360" இலிருந்து மீள்விக்கப்பட்டது