பக்கம்:மாபாரதம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

255

முடித்தான். வீமன் தன்னை எதிர்த்த துரியனின் தம்பியருள் மீதி இருந்தவர் எல்லாரையும் எதிர்த்து அவர் களுக்கு ஒரு முடிவு கட்டினான். சகாதேவன் சகுனியைக் கொன்றான். துரியனுக்குத் துணையாகப் போரிட்டவர்களில் மாண்டவர் பலர்; உயிர் தப்பி ஓடியவர் பலர்.

இராவணனின் இறுதிப் போரில் அவன் தன்னந்தனிய னாக விடப்பட்டதைப்போல இவனும் நிலை கெட்டான். செத்தவரைப் பிழைப்பிக்கும் மந்திரம் ஒன்று ஒரு முனிவனிடம் இருந்து அவன் அறிந்திருந்தான். அதைக் கொண்டு இறந்தவரை எல்லாம் எழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தான்.

அதனால் அவன் அதற்காகத் தடாகம் ஒன்றைத் தேடிச் சென்று அதில் முழுகி மூச்சடக்கிக் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி யோக நிலையில் இருந்து அம்மந்திரத்தைச் சொல்ல முற்பட்டான் அவன் முழுகி இருக்கும் நீர் நிலை பற்றித் தெரியாமல் பல இடத்திலும் தேடினர். சஞ்சய முனிவர் அவன் மூழ்கி மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும் தடாகம் உள்ள இடத்தைக் கூற அசுவத்தாமன் அங்குச் சென்று கூப்பிட்டுப் பார்த்தான். துரியன் செவி சாய்க்கவில்லை. பாண்டவர் ஐவரும் கண்ணனும் அத்தடாகத்தின் கரையிலிருந்து விளித்துப் பார்த்தனர்.

முடிவில் வீமன் வீர மொழிகள் பேசி அவன் மானத்தைத் துண்டினான்.

“உற்றார் உறவினரை வானுலகம் அனுப்பி வைத்து விட்டுக் கோழையைப் போல் இங்கு ஒளிந்து கொண்டிருக்கிறாயே, உனக்கு வெட்கமில்லையா? உனக்கு மானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/258&oldid=1047362" இலிருந்து மீள்விக்கப்பட்டது