பக்கம்:மாபாரதம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

261

அவர்கள் தலைகளை எண்ணி வந்து உன் முன் காணிக்கையாக்குவேன். விடை கொடு” என்றான்.

சாகும் போதும் சங்கரனை நினையாத அத்தீயவன் சங்காரத்தை நினைத்து மகிழ்ந்தான் அழுங்கல் சகதியில் நெளியும் புழுப்போல அவன் தீய செயல்களில் உழன்றான் சாவதற்கு முன் இவ்வெற்றிச் செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும்படி அன்புக் கட்டளையிட்டான்.

அசுவத்தாமன் தனக்குத் துணையாகத் தன் மாமன் கிருபனையும், யதுகுல அரசனாகிய கிருதவர் மனையும் அழைத்தான் அவ்விருவரும் முதலில் சிறிது தயக்கம் காட்டினர். பின் முக்கூட்டுச் சதியில் தம்மைக் காட்டிக் கொண்டனர்.

இரவுப் பொழுதில் கோட்டான் வலிமை பெறுகிறது. பகலில் கூகையைக் காக்கை வெல்கிறது. இரவுப்பொழுது கூகை ஒன்றே ஆயிரம் காக்கையைத் துரத்தி அடிக்கும் ஆற்றல் பெறுகிறது. எல்லாம் கால வித்தியாசம்தான். காலமும் இடமும் கருதிச் செயல்பட்டால் ஞாலமும் கைக்கு வரும் என்ற கருத்தில் நம்பிக்கை வைத்தான்.

பாண்டவர் உறங்கும் வேளை, கரங்களில் படை தொடாத நிலை. இரவுப் பொழுதில் தான் ஒருவனே தனியாகச் சென்று அவர்களைக் கொன்றுவிட முடியும் என்று திட்டமிட்டான்.

மூவரும் பாண்டவர் தங்கும் பாசறையில் நுழைய முந்தினர்; கண்ணன் ஆணையால் அங்குக் காவல் தெய்வமாக இருந்த சதுக்க பூதம் ஒன்று அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது. உள்ளே செல்வதற்கு அறம் குறுக்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/264&oldid=1048274" இலிருந்து மீள்விக்கப்பட்டது