பக்கம்:மாபாரதம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

மாபாரதம்


“பதவியில் இருக்கிறவர்கள் நாங்கள் தவறு செய்கிறோம். பயங்கரவாதம் அதற்கு மருந்து அல்ல; நீங்களும் நாங்கள் செய்த தவறுகளையே செய்கிறீர்கள். பாரத நாடு உங்களைப் போன்ற பயங்கரவாதிகள் கையில் போகக் கூடாது” என்று கூறினான்.

தன் தந்தை தாய் இவர்களின் நினைவுகள் வந்து நின்றன. தன் மனம்போன போக்கெல்லாம் வாழவிட்டுத் தடுக்காத அந்த மூடரைப்பற்றி எண்ணி வருந்தினான். “கண்கள் இழக்கலாம்; ஆனால் நல்ல அறிவை இழந்திருக்கக் கூடாது” என்று கூறி வருந்தினான்.

“அநீதிகள் எங்களோடு அழியட்டும்” என்று கூறி அவன் கடைசி மூச்சு விட்டான்.

பாண்டவர்களை அந்நியமாகக் கருதாமல் அவர்களைத் தம் சொந்த மக்களாக நினைத்து வாழும்படி தன் பெற்றோர்களை அனுப்பினான். அதுவே அவன் விடுத்த கடைசி செய்தியாக இருந்தது.

மைந்தர்களை இழந்த பாண்டவர் திக்கற்றவராகத் திகைத்து வருந்தினார்கள். அக்கணமே சென்று அசுவத் தாமனை அழித்து ஒழிப்பதாகச் சீறிச் சினந்தார்கள். அச்சுதன் ஆகிய அமலன் அவர்களைத் தடுத்தான்.

“அசுவத்தாமன் தவறு உணர்ந்து திருந்தி விட்டான் . சிவனை நினைத்துக் கொண்டு தவவழிக்குச் சென்று விட்டான். தவறு அவனுடையது. அன்று; விளைந்த போரின் விளைவு; அதருமங்களின் பூதாகாரம்”

நாம் எப்படியும் போரில் வெல்வோம் என்று ஆண வத்தோடு செயல்பட்டோம். சூழ்ச்சிகள் செய்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/267&oldid=1047457" இலிருந்து மீள்விக்கப்பட்டது