பக்கம்:மாபாரதம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Rh

திற்கு உரியர் என்ற கருத்து இப்பொழுது உருவாகி வருகிறது, இளம் விதவைகள் தாய்மை அடையாவிட்டால் வமிச விருத்தி இல்லாமல் போய்விடும். ஆட்சிக்கு ஒரு ஆண்மகன் இல்லை என்று ஆகிவிடும்; அந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

சத்தியவதி ஒரு அசாதாரண அறிவாளி; வீடுமனைக் கொண்டு ஏன் ஒரு மகனைத் தன் மருகியர் பெற்றுத்தரக் கூடாது என்று தீவிரமாகச் சிந்தித்தாள்; வீடுமனை அழைத்துப் பேசினாள்.

“அவசரப்பட்டு நீ சூள் உரைத்தாய்; அதனால் மணத்தை மறுத்தாய்”.

“அவசியத்துக்காகத் தானே எடுத்தேன்”.

“இப்பொழுது குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதே”.

“அதற்காக இந்த வயதில் நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா?”

“காலம் கடக்கவில்லை”

“ஆசைகளை அடிவேருடன் களைந்து வாழ்ந்து வரு கிறேன். கொள்கை என் உயிர்; அது என் மூச்சு” என்றான்.

“நீ எனக்கு மூத்தமகன்”

“மறுக்கவில்லை”

“நீ ஒருத்தியோடு உறவு கொள்; மகனை அளித்து எங்களை மகிழவை”

“இயலாது; அவர்கள் என் சகோதரிகள்; இந்த மன நிலையை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது”.

“இப்பொழுது என்ன செய்யலாம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/27&oldid=1048278" இலிருந்து மீள்விக்கப்பட்டது