பக்கம்:மாபாரதம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

25


“தவ முனிவர் தயவை நாடலாம். அவர்கள் கடமையை முடித்துக் கண்ணியத்தோடு போய்விடுவார்கள்” என்றான் வீடுமன்.

“இதற்கு முன் எப்பொழுதாவது இவ்வாறு நடந்துள்ளதா?”

“இராமர் காலத்தில் பரசுராமன் அரச குலத்தினரை வேர் அறுத்தான்; ஆண்கள் குறைந்ததால் சந்ததிக்குப் பஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுது தவ முனிவர்கள் தாம் இந்தத் தரித்திரத்தைப் போக்கினார்கள்”.

“வியாசன் உனக்குத் தெரியுமா?’ என்று அவள் கேட்டாள்.

“பராசர முனிவரின் மகன்”

“அவன் தாய் யார் தெரியுமா?”

“தாயின் பெயர் சொல்வதில்லையே”

“பரிமளகந்தி; நான் தான் அவனுக்குத் தாய்” என்றாள்.

“அதிர்ச்சியாய் இருக்கிறது’ என்றான் அவன்.

“படகு ஒட்டி வந்தேன், படகு அவனுக்குத் தெரிய வில்லை; என் அழகுதான் தெரிந்தது. அப்பொழுது என் பெயர் மச்ச கந்தி, பராசர முனிவன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று என்னிடம் கூறி என்னை உதவுமாறு வேண்டினான். அவன் நாட்டம் என் மீது சென்றது. என்னோடு கூட்டம் வேண்டினான்; அவனைக் கழிக்க இயலவில்லை”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/28&oldid=1048279" இலிருந்து மீள்விக்கப்பட்டது