பக்கம்:மாபாரதம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மாபாரதம்


“மீனவர் மகளையா விரும்பினான்?”

“முனிவர்கள் பேதங்கள் பார்ப்பதில்லை; அதுமட்டும் அல்ல; கன்னிப் பெண்களைத் தொடும்போது யாரையும் சாதிகள் தடுப்பது இல்லை.”

“மீன் நாற்றம்?”

“அதை மாற்றி எனக்கு மலர்நாற்றம் தந்தான்.”

“மச்ச கந்தியாக இருந்த நான் பரிமளகந்தியானேன், பரவிய கமழ் மணம் பெற்றேன். ஆதலின் யோசன கந்தி எனவும் அழைக்கப்பட்டேன்.”

“வியாசன் உன் மகனா? வியக்கும் செய்தியாக உள்ளது.”

“மூத்தவன் அவன் உனச்கு அவனை அழைத்தால் வருவான்.”

“அவனையே அழைத்து இந்தப் பணியை முடிக்கலாமே”

“உண்மைதான்; இரண்டு வகையில் பொருந்தும். சாத்திரப்படி அவன் தவமுனி, கோத்திரப்படி என் மூத்த மகன். குரு குலத்துக்குத் தக்க வாரிசு கிடைக்கும்” என் றாள் சத்தியவதி.

“அதுவே தக்கது” என்று கூறி வீடுமன், தன் மனக் கருத்தை அறிவித்தான்.

வியாசனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தன் மருகியரை அழைத்து அருகில் உட்காரவைத்துப் படைப்பு இலக்கியம் பற்றிப் பாடம் சொல்லி அவர்களை மனங் கொள்ளச் செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/29&oldid=1048280" இலிருந்து மீள்விக்கப்பட்டது