பக்கம்:மாபாரதம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

27


பாரம்பரியக் கற்பில் கட்டுண்ட மரபினை உடைய அவர்கள் இதை ஏற்க ஒருப்படவில்லை; எனினும் அரசியல் காரணம் இதில் அடங்கி இருப்பதால் அவர்களால் அதற்குத் தடை செய்யமுடியவில்லை. தன் உடலைத் தர இசைந்தார்கள்; உள்ளம் அதற்கு இசையவில்லை.

கட்டில்கால்களுக்குச் சுமை ஏறியது; வியாசன் அதில் அமர்ந்து கட்டுரை எழுதினான்; எனினும் தொட்டில் குழந்தைக்கு ஒரு பழுது ஏற்பட்டது. அவள் அம் முனிவர் கூடியபோது வெட்கத்தால் கண்களை முடிக்கொண்டாள். அதனால் பார்வை அற்றவனே பிறப்பான் என்று வியாசன் சொல்லிச் சென்றான். அம்பிகை நிலை இது ஆயிற்று.

அம்பாலிகை அடுத்த தேர்வு. அவளும் இதில் சோர்வு காட்டினாள், வெட்கத்தால் உடல் வியர்த்து வெளுத்து விட்டாள்.

அதனால் வெள்ளை நிறத்துச் சோகையன் அவளுக்குப் பிறப்பான் என்று சொல்லிப்போனான்.

இருமுறையும் தவறுகள் நிகழ்ந்துவிட்டன. நாட்டம் இல்லாத கூட்டங்கள் முழு வெற்றியைத்தரவில்லை.

அம்பிகைக்குத் திருதராட்டிரன் பிறந்தான்; அம் பாலிகைக்குப் பாண்டு பிறந்தான். ஒருவன் பார்வை அற்றவன்; மற்றொருவன் சிவப்பு அணுக்கள் குறைந்து வெளுத்துக் காணப்பட்டான்.

மறுபடியும் வியாசன் அழைக்கப்பட்டான். இம்முறை அம்பாலிகை மறுப்புச் சொல்லவில்லை. பணிப்பெண் ஒருத்தியைத் துணையாக அழைத்துச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/30&oldid=1034222" இலிருந்து மீள்விக்கப்பட்டது