பக்கம்:மாபாரதம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மாபாரதம்


குறு குறு நடந்தும்,சிறுகை நீட்டியும், இட்டும் தொட் டும் கல்வியும் துழந்தும், உண்ணும் சோற்றை மெய்பட விதிர்த்தும், சிறு நகைசெய்து விளையாடும் சிறுவர் இல்லாத வாழ்வு பெருமை பெறுவதில்லை என்றான்.

“யான் செய்த தீவினையால் அந்த பாக்கியத்தை இழந்து விட்டேன். நீ மனம் வைத்தால் அந்தக் குறை எனக்குத் தீரும்” என்றான்.

“துறக்க பூமிக்கச் சென்ற பிறகு இங்கு இருந்து எனக்குப் பிதிர்க்கடன் செய்ய மகன் ஒருவனைப் பெற்றுத்தர வேண்டுகிறேன். இல்வாழ்பவர்க்குத் தாய்மையால் பெண்கள் இன்பம் சேர்த்துத் தரமுடியும்” என்று அவனுக்குத் தோன்றிய அறநெறிகளைச் சொல்லிப் பிறன் ஒருவனைக் கொண்டு மகவு பெறுக என்றான்.

கணவன் மொழிகேட்ட பொற்பாவை போன்ற குந்தி அனுமதி அளித்தாலும் அதை ஏற்க அவள் மதி இடம் தர வில்லை; மறுத்தாள். உயிர் இறுவது போன்று வெட்கம் அடைந்தாள்: சொல்லத்தகாத சொற்களைக் கூறுவது தகாது. பழிக்கு ஆளாக வேண்டிவரும். அது மட்டும் அல்ல; கடலைச்சேர வேண்டிய நதி குட்டையில் பாய்வது தகுமா? இல்வாழ்பவள் பிறர் மேல் மனம் செல்வது எவ்வாறு ஏற்க முடியும்” என்று கூறி அவனோடுவாதிட்டாள்; மீண்டும் பழைய தவறைச் செய்ய அவள் விரும்பவில்லை.

“இதில் எந்தத் தவறும் இல்லை” என்றான்.

வியாசன் மூலம் திருதராட்டிரனும் விதுரனும் தானும் பிறந்ததை முன் உதாரணமாகக் காட்டினான். “இப்படி எத்தனையோ வரலாறுகள் உள்ளன. ஆபத்துக்குப்பாவம் இல்லை என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/35&oldid=1048284" இலிருந்து மீள்விக்கப்பட்டது