பக்கம்:மாபாரதம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

35

வந்தான். குழம்பிக் கலைந்த கருச்சிதைவை உருப்படுத்தித் தாழிகள் நூறு கொண்டு வந்து அவற்றில் தனித்தனியே நிரப்பி எஞ்சியவற்றை மற்றும் ஒரு பானையில் இட்டான். அத்தனித்தாழி பெண்மகள் பிறக்க என்று வைத்தான்.

“தாழியில் இட்ட தசைகள் உருப்பெறும் வரை அவற்றைக் கைபடாது காக்க வேண்டும்’ என்ற காந்தாரி யிடம் சொல்லிவிட்டுச் சென்றான். முட்டையில் இருந்து வெளிப்படும் பாம்பு போல அவை வெளிவரும் வரை காந்தாரி காவல் காத்தாள்.

தருமன் பிறந்த சில ஆண்டுகளில் மற்றொரு மகவு பெறப் பாண்டு விரும்பினான்; குந்தி காற்றின் வேந்தனாகிய வாயுபகவானை மனத்தில் நினைத்து மந்திரம் கூறினாள்; அவன் வருகையால் மற்றொரு மகன் பிறந்தான்; அவனுக்கு வீமன் என்ற பெயர் இட்டனர், பீமன் என்பது வடசொல் ஆகும்.

வீமன் பிறப்பதற்கு முந்திய நாளில் தாழியில் இருந்து துரியோதனன் வெளிப்பட்டான்; தருமன் மூத்தவன் ஆகின்றான்; ஒருநாள் வேறுபட்டால் துரியன் வீமனுக்குப் பின்னவன் ஆகியிருப்பான்.

துரியனுக்குப்பிறகு ஒவ்வொரு நாளும் தம்பியர்கள் தொடர்ந்து பிறந்தனர். அவர்களுக்குப்பின் தனித்தாழியில் ஒரு பெண் மகவு பிறந்தாள். பெயர் துச்சனை என்பது அதற்குப் பிறகு தொடர்ந்து இந்திரனை வேண்ட இந்திரன் வருகையால் அருச்சுனன் பிறந்தான். பங்குனி மாதத்தில் பூரண நிலவு நாளில் அவன் பிறந்ததால் அவனுக்குப் பங்குனன் என்ற பெயர் உண்டாயிற்று. பார்த்திபன், விசயன், பார்த்தன், காண்டீபன் முதலியன அவனுக்கு வழங்கிய வேறு பெயர்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/38&oldid=1034237" இலிருந்து மீள்விக்கப்பட்டது