பக்கம்:மாபாரதம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

45


ஒரு சமயம் கிணற்றில் ஆசிரியனின் மோதிரம் ஒன்று விழுந்து விட்டது. அதனை எடுத்துக் கொடுக்குமாறு மாணவர்களிடம் துரோணன் கூறினான். அருச்சுனனே அதனை எடுத்துக் கொடுத்தான்.

அடுத்து அங்கிருந்த ஆலமரத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விழ அம்பு விடும்படி விசயனிடம் உரைத்தான். அவனும் அவ்வாறு தன் வில் திறனால் அம்மரத்தின் இலைகளைக் கீழே விழச் செய்தான். அம்மரம் இலைகள் அற்றுக் கிளைகள் மட்டும் தாங்கி நின்றன.

ஒரு முறை துரோணனின் கால்களை ஒரு முதலை பற்றிக் கொண்டது. பக்கத்தில் இருந்த அவன் சீடர்கள் அனைவரும் பதற்றமடையாமலும், அந்த முதலையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடாமலும் வெறும் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். அருச்சுனன் ஒருவன் மட்டும் வில்லோடு விரைந்து சென்று அம்பு விட்டு அவன் காலுக்கு ஊறு நேராதபடி அதனை வேறு படுத்தினான். ஆசிரியர் பால் கொண்ட அன்பும், விரைந்து செயல் படும் திறமும், மனத் திண்மையும் ஆசிரியனைப் பெரிதும் கவர்ந்தன. அவனுக்குத் தன்பால் இருந்த ‘பிரசிரஸ்’ என்னும் அத்திரத்தை தந்து அதைப்பயன்படுத்தும் மந்திரமும் சொல்லி அருளினான். இருவரும் உயிரும் உணர்வும் போல விரும்பிப் பழகினர். குரு தாம் காட்டிய அருளிலும், சீடன் ஆசிரியர்க்குச் செய்த வழிபாட்டிலும் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டனர்.

அரங்கேற்றம்

மதிகுலத்து மன்னனாகிய திருதராட்டிரனும், விரதவீரனாகிய வீடுமனும், அறக்கடவுளாக விளங்கிய விதுரனும் குருகுலமைந்தர்கள் கற்ற படைக்கலப் பயிற்சியைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/48&oldid=1048293" இலிருந்து மீள்விக்கப்பட்டது