பக்கம்:மாபாரதம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மாபாரதம்

மகிழ்வதற்காக அரங்கேற்றம் செய்துகாட்டத் துரோணன் விரும்பினான். முதற்கண் கொற்றவையாகிய துர்க்கைக்குப் பலிகொடுத்து விழாவினைத் தொடங்கினான்.

அரசர்களும், அறிஞர்களும், ஆசாரியர்களும், மக்களுள் மேம்பட்டவர்களும் அங்கு வந்து அவ்வரங்கில் குழுமினர். விண்ணகத்தின் தேவர்களும், சித்தர்களும், மற்றுமுள்ள தெய்வங்களும் கூடிநின்றது போல் இவர்கள் காட்சி அளித்தனர்.

போர்ப் பயிற்சிக்கு உரிய படைக் கருவிகளை அழகுற வைத்துக் காட்டினர். யானை, குதிரை, தேர் இவற்றைப் பலவகையாக நடத்திக் காட்டினர். முனிவர்களும் அரசர் களும் மாடத்தில் இருந்து இவற்றைக் கண்டு களித்தனர். இவை மனிதர் வேகம் அல்ல; வாயு வேகம் என்று கூறிப் பாராட்டினர்.

வலிமையும் திறனும் செயற்பாடும் சரி நிகராக உடைய துரியனும் வீமனும் கதாயுதம் தாங்கி எதிர் எதிர் நோக்கி மோத முற்பட்டனர். மராமரங்களை எடுத்துக் கொண்டு காட்டுவாழ் யானைகளைப் போல நெருங்கிச் சென்றனர்.

தண்டும் தண்டும் மோதிக் கொண்டு பேரோலி செய் தது; அது இடிபோல் ஒலித்தது. இடதுசாரி வலது சாரியாக நடந்து தம் திறமையைக் காட்டினர். சுற்றி வளைத்தும், நேர் சென்றும் தன் திறமையைப் புலப்படுத்தினர். வீர நடையில் தன் பெருமிதத்தைப் புலப்படுத்தினர்.

பின் மறத்தோடு செயிர்த்து வைராக்கியம் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள முனைந்தபோது துரோணனின் மகன் அசுவத்தாமன் இடை சென்று தடுத் தான்.

இந்திரனின் மகனான அருச்சுனன் ஆயுத புரோகிதன் ஆகிய துரோணனின் மலர்த்தாளில் முடி வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/49&oldid=1034251" இலிருந்து மீள்விக்கப்பட்டது