பக்கம்:மாபாரதம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மாபாரதம்


துரோணன் அவனைப்பார்த்து நகைத்து அவன் வீரம் என்ன ஆயிற்று என்று கேட்டான்.

“தேரில் கட்டிக் கொணர்வேன் என்றேன்; கொண்டு வந்து ஆயிற்று பார் முழுதும் இப்பொழுது என்னது ஆயிற்று; எனக்குரிய பூமியில் பாதி யான் உனக்கு அளிக்கி றேன் பெற்றுக்கொள். உயிர் வேண்டுமானால் ஊருக்குத் திருடபிப்போ” என்றான்.

“யானும் நீயும் சமமா என்று கேட்டாய்; இன்று நீ ஒர் சிறைக் கைதி; எல்லாம் எனக்குச் சொந்தம்; நான் ஓர் அரசன். நீயும் உன் தாழ்வு நீங்கி என்னைப்போல அரசனாக இருக்கவே பாதி தருகிறேன். நண்பர்கள் சமமாகி விட்டோம். ஏற்றத் தாழ்வு நீங்கி விட்டது. நட்புக்கு உயர்வு தாழ்வு தடையாக இருந்தது. உன்னைப்பழைய நண்பன் என்பதால் நேசிக்கிறேன். செல்வம், பதவி இவை வரும்; போகும்; நட்பு நிலைத்தது; இதை உணர்க. பகை நீக்கி வாழக் கற்றுக் கொள்”.

“அருச்சுனன் சிறுவன்; ஆனால் மாவீரன்; இதனை அறிந்துகொள். மறுபடியும் துணிந்து போருக்குநிற்காதே” என்று சொல்லி அவனிடம் அன்பு காட்டிக் கண்ணியமாக நடத்தி அனுப்பி வைத்தான். பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும் என்பது பழமொழி அவன் திரும்பிச் சென்றான். பாம்பை அடித்துப் போட்டால் அது எப்படியும் பழி வாங்கி விடும் என்பார்கள்.

துருபதன் வேள்வி செய்தல்

நல் தவசிகள் ஆன உபயாசன், யாசன் என்னும் ஆசான் கள் கூறிய முறைப்படி பெருவேள்வி ஒன்று செய்தான். அவர்கள் ஒமப்பொருளில் ஒரு பகுதியை ஒரு பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/53&oldid=1048297" இலிருந்து மீள்விக்கப்பட்டது