பக்கம்:மாபாரதம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

53

கொண்டது இல்லை; அவர்களோடு பாசம் கொண்டு ஒன்று பட்டு உறவோடு வாழ எங்களால் இயலாது” என்று கூறினான்.

மகன் பால் கொண்ட பாசத்தால் அவன் மனம் திரிந்தது. வீடுமனையும் விதுரனையும் அழைத்து அவர்கள் ஒரு சேர வாழாவிட்டால் மோதிக்கொண்டு அழிவார்கள்; அவர்களை வெவ்வேறு இடத்தில் வைப்பதே சரி என்று கூறினான். அவர்கள் அதற்கு மறுப்புக் கூறாமல் அவரவர் விருப்புடன் நடந்து கொள்வதே மேல் என்று சொல்லி விட்டுப் போயினர்.

அரக்கு மாளிகை

துரியன்பால் பாசம் உடைய அமைச்சன் புரோசனன் அழைக்கப்பட்டான். அவனோடு துரியனும் திருதராட்டி ரனும் கலந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

வாரணாவதம் என்னும் நகருக்குத் தருமனை அனுப் புவது என்றும். புரோசனன் அவனுக்கு அமைச்சனாக இருந்து உடனிருந்து கெடுப்பது என்றும் திட்டம் தீட்டினர்.

வாரணாவதத்தில் சிவனுக்குத் திருவிழா எடுக்கிறார் என்றும்; அதில் பாண்டவர் பங்கு கொள்ள வேண்டும் என்றும் திருதராட்டிரன் சொல்லி அனுப்பினான். அங்கே ஆட்சி சீர் குலைந்துள்ளது என்றும், அதனை மாட்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் சொல்லித் தருமனை அனுப்பி வைத்தான்.

அவனும் தடை சொல்லாது தம்பியரோடும் தாய் குந்தி யோடும் வாரணாவதம் போய்ச்சேர்ந்தான். சிவனை வணங்கி வழிபட்டு அந்த அமைச்சன் காட்டிய மாளிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/56&oldid=1048299" இலிருந்து மீள்விக்கப்பட்டது