பக்கம்:மாபாரதம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

55

வெளியேறி விடலாம் என்ற ரகசியத்தைச் சொல்லி வைத்தான். அதனை வீமன் மட்டும் கேட்டு வைத்தான்.

தன் சகோதரருக்கும் தாய்க்கும் கூடச் சொல்லவில்லை, புரோசனனை மட்டும் கருத்தோடு கவனிக்கச் சொல்லி வைத்தான்.

பாம்போடு பழகும் பாம்பாட்டி போல அந்த அமைச்சனை வெளியே தனியே விடாமல் தம்மோடு இருக்குமாறு செய்து கொண்டனர். அவர்கள் பார்வையிலேயே அவனை வைத்துக் கொண்டனர்; அவன் மீது அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் போலப் பழகினர்.

அங்ஙனம் பழகி வரும் நாளில் ஒரு நாள் இரவு நீண்ட நோம் நாட்டு அரசியலைப்பற்றி விவாதித்துப்பொழுதைக் கடத்தினர். நேரம் ஆகிவிட்டது; இங்கேயே தங்கலாம் என்று அவனிடம் சொல்லிப் படுக்கப் பாயும் தலையணையும் தந்தனர்.

நீள் துயிலில் அமைச்சன் கிடந்த போது வீமன் தனியே எழுந்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்து விட்டுத் தன் சகோதரரையும் தாயையும் அழைத்துக்கொண்டு தூணைப் பெயர்த்துத் தள்ளிச் சுரங்க வழியாக வெளியேறித் தப்பிச் சென்றான்.

எதிர்பாராத விதமாகப் பற்றிய நெருப்பில் அகப்பட்டு சாம்பல் ஆயினான்; தன் வினையே தன்னைச் சுடும் என்பதற்கு அவன் இலக்கு ஆயினான். பாண்டவர்க்குத் தேனில் விஷம் கலந்து இடுவதற்காக வேடுவர் ஐவரை அழைத்து வந்திருந்தான். அவர்களுள் முதிய தாயும் உடன் வந்திருந் தாள். தீயவை தீய பயத்தலால் அவை தீயினும் அஞ்சப்படும் என்பது உண்மையாயிற்று. தீமை செய்ய வந்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/58&oldid=1034984" இலிருந்து மீள்விக்கப்பட்டது