பக்கம்:மாபாரதம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

59

ணன் தருமனுக்கே இன்னும் மணம் ஆகவில்லை; எனக்கு எப்படி மணம் ஆகும்?”

“இங்கே இலக்குவன் இல்லை; இருந்தால் அவன் இலக்கு வேறாக இருக்கும்” என்று கூறி விரட்டினான்.

குந்தி நினைத்துப் பார்த்தாள்; அவள் காதல் உள்ளத்தை மதித்தாள். தமையனை இழந்து தனியாளாக இருப்பதையும் உணர்ந்தாள். தன் மற்றைய மக்களோடு பேசி ஒரு முடிவுக்கு வந்தாள்.

வீமனுக்கு ஏற்ற உடல்கட்டும் உரமும் உடையவள்; வந்தவளை உதறித்தள்ளுவது தரமும் அன்று” என்று முடி வுக்கு வந்தாள்.

அவனை மருகியாக ஏற்றுக் கொண்டாள். இடிம்பி மானுடக்காதலில் வெற்றி பெற்றாள். அரக்கியாக இருந் தால் என்ன? அவள் பெண்மை வெற்றி கொண்டது.

இவ்வாறு இடிம்பியின் புது உறவோடு அவ்வனத்தில் பாண்டவர்கள் இருந்தபோது வியாசன் அவர்களை வந்து சந்தித்தான்.

“மனித நடமாட்டம் இல்லாத இந்த மலைச்சாரலை நீங்கி முனிவர்கள் தங்கி வதியும் சாலி கோத்திரம் என்னும் வனத்தில் தங்குவீர்; பின் வேதியர் மிக்கு வாழும் வேத்திரகீயம் சேர்வீர்” என்று விளம்பி அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

சாலி கோத்திரம் என்னும் வனத்தில் சில காலம் தங்கினர். முருகனும் வள்ளியும்போல வீமனும் இடிம்பியும் ஒருவரை ஒருவர் விரும்பி இன்ப வாழ்வு பெற்றனர். சோலைகளிலும்,மலைச்சாரல்களிலும் திரிந்து விளையாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/62&oldid=1048304" இலிருந்து மீள்விக்கப்பட்டது