பக்கம்:மாபாரதம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மாபாரதம்


“உனக்கு ஒரு நாளைக்கு வேண்டிய உணவோ மிகவும் சிறியது; நீ கொன்று அழிப்பதுவோ அதனினும் பெரிது; அவை வீண் ஆகிவிடுகின்றன. நாங்களும் யாருக்கு எப்பொழுது என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டே இருக்கிறோம்; வீட்டுக்கு ஒரு ஆளும் மாடும் தினந்தோறும் முறை வைத்துக் கொண்டு நாங்களே அனுப்பி விடுகிறோம். நீ ஊருக்குள் வரவேண்டாம். நீ இருக்கும் இடம் தேடி உணவு உரிய நேரத்தில் வந்து விடும் என்று சொல்லி ஏற்பாடு செய்துள்ளனர்”.

“தப்பித் தவறி எதிர்த்தால் அந்தக்குடும்பமே நாசம் செய்து விடுவான். தின்பதும் குறைவு அல்ல; ஒரு வண்டி நிறையச் சோறும் கறியும் கொண்டு செல்ல வேண்டும்”.

“இன்று முறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது; யாரை அனுப்புவது என்று கலங்கிக் கொண்டு இருக்கிறோம்”

“மகளை அனுப்புவதாக இருந்தால் அவள் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாள். மகனை அனுப்புவதாக இருந்தால் குடிக்கு ஒரே மகன் அவனை இழந்து விட்டு எங்களால் வாழ முடியாது. என் கணவனை அனுப்புவதாக இருந்தால் அதற்கப்புறம் எங்களுக்குப் பாதுகாவல் இருக்காது. நானே போவது என்றால் இந்த வீட்டைக் கவனித்துக்கொள்ள வேறு ஆள் கிடையாது. இந்தச் சூழ் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறோம்” என்றாள்.

“இதற்காகவா கவலைப்படுகிறாய்? வீமனைப்போல என் மகன் ஒருவன் வாட்டசாட்டமாக இருக்கிறான். அனுமனைப்போல் ஆற்றல்படைத்தவன். அவனிடத்தில் இந்தச் சூரன் தவிடுபொடியாக வேண்டியதுதான், பிராமணகுலத்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/65&oldid=1048308" இலிருந்து மீள்விக்கப்பட்டது