பக்கம்:மாபாரதம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசி

67

அவர்கள் மகிழ்ச்சியைப் பெருக்குவித்தான். நன்றிக் கடனோடு அவனை நயந்து பார்த்துத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். வீட்டில் விளக்குகள் வைத்து ஒளி ஏற்றி விழாக் கொண்டாடினர். குந்தியையும் தருமனையும் வணங்கித் தம்பியரிடம் அளவளாவி அவன் மகிழ்ச்சி காட்டினான். தீயவரை ஒழித்து நல்லோரைக் காக்கும் தெய்வத் திருமால் போல இவன் செய்கை இருந்தது என ஊரார் பாராட்டினர். அவ்வூரில் வளைந்திருந்த முதுகுகள் நிமிர்ந்து நின்றன. எந்த அசுரனும் வந்து தம்மை அண்ட முடியாது என்று பெருமை அடைந்தனர். ஊர் விழாக் கோலம் பூண்டது.வீமன் மாவீரன் என்று புகழப்பட்டான். பகனை ஊரார் அடக்கம் செய்தனர். மாவீரன் கதையைப் பற்றிப் பேசுவதில் மகிழ்வு காட்டினர்.

2. திரெளபதியின் சுயம்வரம்

துரோணனுக்கும் துருபதனுக்கும் பகை திரெளபதியின் பிறப்புக்குக் காரணம் ஆயிற்று. அடிபட்ட வேங்கை பதுங்கிப்பாயும் முயற்சியே துருபதனது. எப்படியும் துரோணனை உயிர் பறிப்பது என்று உறுதிகொண்டான். துரோணனுக்குப் பக்க பலமாக இருந்தவன் விசயன். அவனை வளைத்துப் போட்டுக்கொண்டால் துரோணன் தணிந்துபோக வேண்டியதுதான். துருபதன் தன் மகன் திட்டத்துய்மனைக் கொண்டு எளிதில் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டான்.

பிறந்தவுடனே பெரிவளாகச் சிறந்தவள் திரெளபதி. வனப்பு அவளை நாடி வந்து தேடிப் பெற்றது; பிறப் போடு கூடி வந்த ஒன்றாக இருந்தது. பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்புக்கு இரையாகி விட்டார்கள் என்ற செய்தி பரவியது. எனினும் துருபதன் நம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/70&oldid=1047473" இலிருந்து மீள்விக்கப்பட்டது