பக்கம்:மாபாரதம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

77


பகதத்தன் நாண் பூட்ட முடியாமல் நாணித் தளர்ந்தான். சராசந்தன், நீலன், துரியோதனன் நாணினை அருகில் கொண்டு வந்து பூட்ட முடியாமல் சோர்ந்து முயற்சியைக் கைவிட்டனர். கன்னன் கயிலை மலையை எடுத்த இராவணன் போல வில்லை உயர்த்திப்பிடித்தான். நாண் மயிர் இழையில் பூட்ட முடியாமல் வில்லின் காம்பு தலைமுடியைத் தாக்கக் கீழே விழுந்தான்.

அரவநெடுங்கொடி உயர்த்திய துரியன் முதலாக உள்ள அரசர் அனைவரும் அந்த வில்லை வளைத்து நாண் ஏற்ற முடியாமல் வலிமை குன்றி, எழில் மாழ்கிச் செயலற்று, ஊக்கம் அழிந்து தத்தம் இருப்பிடம் சேர்ந்தபின் இந்தி ரன் மகனாகிய அருச்சுனன் மிதிலையில் வில்லை வளைத்த இராமனைப் போல இளங் கொடி இருந்த அவையை நோக்கி அணுகினான்.

அந்தணன் வடிவில் அருச்சுனன்

“மன்னர் மரபில் பிறந்து மண் ஆள்கின்ற இந்த மகிபர்க்கு அல்லாமல் மறை நூல் கற்ற அந்தணர்கள் இவ் வில்லை வளைத்து இலக்கினை வீழ்த்தினால் இளந் தோகை மாலை சூட்டுவாளா?” என்று கேட்டான்.

அதற்குத் திட்டத்துய்மன் எழுந்து, “அதனால் பெருமை கூடுமேயன்றிக் குறையாது” என்றான்.

சிவபெருமான் மேருமலையை எடுத்தது போல் அருச்சுனன் அவ்வில்லை எடுத்தான். நாண் ஏற்றினான்; அம்பு தொடுத்துச் சக்கரம் சுழலும் நிலையில் மேல் இருந்த இலக் கினைத் தாக்கி வீழ்த்தினான். வயவேந்தர் நாணம் அடைந்தனர். “தனு நூலுக்கு ஆசிரியன் இவனே யாவான்” என்று அவையோர் பாராட்டினர். குழுமியிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/80&oldid=1048319" இலிருந்து மீள்விக்கப்பட்டது