பக்கம்:மாபாரதம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மாபாரதம்


அன்னையைத் தருமன் வணங்கி “நின் சொல் வேத வாக்கு ஆகும். நீ நினைத்துச் சொல்லியது அன்று; எங்கள் நெஞ்சிலும் இந்நினைவு உண்டு” என்று தருமன் ஒளிவு மறைவு இன்றிக் கூறினான். பார்த்தனைப் பயந்த பாவை யாகிய குந்தி “விதி வழி இது” என்று எண்ணி அமைதியுற்றாள். அன்று இரவு எல்லாம் முன்தினம் நடந்த சுயம்வரம் பற்றியும், விசயன் இலக்கு வீழ்த்தியது பற்றியும், அரசர் தம்மை எதிர்த்து ஓடியது பற்றியும் மைந்தர்கள் கூற உள்ளம் நெகிழ்ந்து அவற்றைக் குந்தி கேட்டு மகிழ்ந்தாள்.

துருபதன் அழைப்பு

பூவையைப் பெற்ற பூபதியாகிய துருபதன் அவ்வீரர் தம் பெருமிதத்தைப் பற்றியும், அவர்கள் பாண்டவர்கள் என்பது பற்றியும் ஒற்றரால் கேட்டு உணர்ந்து நெஞ்சத்தில் உவகை கொண்டான். மறுநாள் அவர்களைத் தம் மனைக்கு அழைத்து வந்தான். மற்றும் அவர்களைச் சிறப்புச் செய்யப் பல பொருள்களை அவர்கள் முன் வைத்தான், அவர்கள் போர்ப்படைக்கருவிகளை மட்டும் தேர்ந்து எடுத்துக் கொண்டனர். அதனால் அவர்கள் மறக் குடி வீரர் களாகிய பாண்டவர்கள் என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டான்.

கணையால் வென்று அவளைக் கைப்பிடித்த காதல னுக்கே அவளை மணம் முடிக்கக் கருதி அதைத் தெரிவித் தான். அதற்குத் தருமன் இடையிட்டு “ஐவரும் மணப் போம்” என்று கூறினான். அதனைக்கேட்ட துருபதன் திகைப்பும் தளர்வும் கொண்டான். “இது அடுக்குமா” என்று நடுக்கம் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/83&oldid=1048322" இலிருந்து மீள்விக்கப்பட்டது