பக்கம்:மாபாரதம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மாபாரதம்

களில் தொடர்ந்து இன்பம் அனுபவித்தனர். அப் பிறப்புகளை அடுத்து ஒருபிறப்பில் அவள் இந்திரசேனை ஆனாள். அவனையே கணவனாக அடைந்தாள். அறுவை தந்த இல் லற வாழ்க்கையில் அலுத்துத் துறவறம் மேற்கொண்டான்.

அன்னோன் அவளைவிட்டு நீங்கவும் அவன் மேல் அவள் ஆசை மிகுந்ததே தவிரக் குறையவில்லை. அவள் அவனையே நினைத்து அருந்தவம் செய்தாள். சிவனிடம் முறையிட்டாள்.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவன் கேட்டான்,

“கணவன் வேண்டும்” என்ற ஆர்வத்தினால் அதை யே ஐந்து முறை கூறினாள் கணவனை வேண்டு மென் றாளே தவிர அம் முனிவனே தனக்குத் துணைவன் ஆக வேண்டும் என்று கேட்க மறந்தாள், அவ்வேண்டுகோளின் படி அவள் திரெளபதியாய்ப் பிறந்து இருக்கிறாள் என்று விளக்கினான்.

மற்றும் மீதி வரலாற்றையும் கூறத் தொடங்கினான் முன் நின்ற சிவன் அருள் செய்தபடி இந்திரசேனை கங்கையில் முழுகித் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள். கணவனை நினைந்து அழுது கொண்டிருந்த வளைக் கண்டு அவ்வழியாக வந்த இந்திரன், “ஏன் அழுகி றாய் பெண்ணே” என்று கேட்டான்.

அவனோடு தொடர்பு கொள்ள விரும்பி ஆசை பற்றி “வருக” என அவள் அழைத்தாள். அவனும் உருகி அவளை அடையும் ஆர்வத்தில் பக்கத்தில் இருந்த பரமசிவனை மதிக்காமல் அவள்பால் நெருங்கினான்; சிவன் “இவனுக்கு என்ன இவ்வளவு திமிர்” என்று அவன் மீது சீற்றம் கொண்டான். அதனால் இந்திரன் துஞ்சியனைப் போல் புலம்பிக் கீழே விழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/85&oldid=1048325" இலிருந்து மீள்விக்கப்பட்டது