பக்கம்:மாபாரதம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மாபாரதம்

மண மேடையில் திரெளபதி வலப்பக்கமாகவும் தருமன் இடப்பக்கமாகவும் அமர்ந்தனர். தெளமியன் என்னும் வேதம் ஒதும் பார்ப்பான் புரோகிதனாக இருந்து மணம் நடத்தி வைத்தான். தீ வலம் செய்து, கைகளில் காப்புக் கட்டிக் கொண்டு பெருகிய ஓமத்திவும் இட்டான்; இவ்வாறே மற்றைய நால்வரும் மணமனையில் அடுத்து அடுத்து அமர்ந்து சடங்குகளுக்கு உள்ளாயினர்.

இல்லறம் இனிது நடைபெறத் துருபதன் நீர்வார்த்துக் கன்னிகா தானம் செய்தான்; மற்றும், தேரும், யானையும், சேனையும், நிலமும், தனமும் தமது என்று கூறி அவர்கள் உடைமையாக்கிக் கொடுத்தான். அவர்கள் அங்கு மருமகன்கள் என்ற உரிமையும் பெருமையும் பெற்றுச் சிறப்புடன் இருந்தனர்.

துரியனின் எதிர்ப்பு

பார்ப்பனர் யாரோ வந்து அந்தப் பாவையைக் கைப் பற்றினர் என்று பகை காட்டாமல் நாடு திரும்பிய துரியன் அவர்கள் பார்த்திபர் ஆகிய பாண்டவர் என்று அறிந்ததும் படை கொண்டு பாஞ்சால நாட்டின் மீது பாய்ந்தான்.

துருபதனின் படைகள் திறமை மிக்கவையாக இருந்தன; பாண்டவர்கள் தலைமையில் அவை செம்மை யாகப் போர் செய்தன. இறந்தவர் போக இருந்தவர் அனைவரையும் துருபதன் படை துரத்த அத்தினாபுரம் நோக்கிப் பின்வாங்கினர். கவுரவர்கள் ஆகிய பாம்பு அர்ச்சுனனின் நாண் ஒலியாகிய இடியையும் அப்பு ஆகிய பழையையும் கண்டு ஒட்டம் பிடித்தது. யானை முகத்தை உடைய தாரகாசுரன் முருகவேளுக்கு உடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/87&oldid=1035642" இலிருந்து மீள்விக்கப்பட்டது