பக்கம்:மாபாரதம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

87

அவர்களைப் பொறுத்த வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது எனினும் அவர்கள் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட நாரதன் அவர்களுக்கு அவர்களைப் பாதிக்கக் கூடிய கதை ஒன்று கூறினான்.

எந்த ஒற்றுமையின் பேரில் ஐவரும் சேர்ந்து ஒருத்தியை மணந்தார்களோ அதே அடிப்படையில் அவர்கள் வேறு படக்கூடும் என்பதை அறிவித்தான்.

“சுந்தன் உபசுந்தன் என்பவர்கள் ஒரு தாய் வயிற்றுப் பிறந்த அசுர சகோதரர்கள். ஆற்றல் மிக்க இல் அசுரர் களைக்கண்டு அமரரும் அஞ்சினர். இந்திரன் அவர்களைப் பிரிக்க எண்ணினான். திலோத்தமை என்னும் நடன அழகியை அவர்கள் முன் அனுப்பி வைத்தான். வெறி கொண்டவர்களாகி நெறி தப்பினர். பெரியவன் வயதால் அவள் தனக்கு உரியவள் என்றான்; இளையவன் அவள் தன்னைத்தான் விரும்புவாள் என்றான்; சிறுபொறி பெருந் தீயாக மாறியது; அவளை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்; மாறி மாறித்தாக்கிக் கொண்டனர்; இருவரும் இறுதியில் இறந்து ஒழிந்தனர்.

ஒரு பெண்ணின் காரணமாக அசுரர்கள் இருவர் டோரிட்டுக் கொண்ட கதையைச் சொல்லி அவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினான்.

“உங்களுக்குள் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்வதுதான் உங்களுக்கு நல்லது.”

“ஆண்டுக்கு ஒருவராக அவளுக்கு உற்ற கணவராவீர்; தப்பித்தவறி இருவர் இன்னுரையாடும் போது இடைப் பிற வரலாக நுழைந்து விட்டால் அந்தப் பாபு விமோசனத்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/90&oldid=1048327" இலிருந்து மீள்விக்கப்பட்டது