பக்கம்:மாபாரதம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மாபாரதம்

திற்காகத் தீர்த்த யாத்திரை போக வேண்டும்” என்று கூறினான்.

கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருந்தது. சிக்கல்கள் இன்றி அவர்கள் வாழ முடிந்தது. அவளுக்கும் ஒரளவு விடுதலை கிடைத்தது போல ஆயிற்று.

சோதனை

நாரதன் காட்டிய வழிப்படி திரெளபதி முதல்வனுக்கு உறவினளாக இருந்தபோது அருச்சுனன் அவர்களின் தனிமையில் தலைகாட்ட நேர்ந்தது. எதிர்பாராதவிதமாக அவர்கள் இனித்துப் பேசித் தனித்து இருந்த நிலையில் தோட்டத்து வழியே உள் அறைக்குச் சென்றான்.

பார்ப்பனன் ஒருவன் பசு ஒன்றைக் கொள்ளையிடப் பறி கொடுத்துவிட்டுப் பார்த்திபன் ஆயிற்றே என்பதால் அருச்சுனனிடம் வந்துமுறையிட்டான்.முறைகேட்ட அவன் கள்வனைத் துரத்திப் பிடிக்க அம்பும் வில்லும் கொண்டு வர உட்சென்று நுழைந்தான் சீறடிச் சிலம்பின் ஒலி செவியில் பட்டது. பேரிடி கேட்டதுபோல் ஆயிற்று. அவ்வளவு தான்; அவன் தன் நியமம் கெட்டுவிட்டது என்று முடிவு செய்து கொண்டான்.

பாவம் ஏதோ செய்துவிட்டது போன்று ஒரு பரிபவம் அவன் மனத்தில் தோன்றியது. நாரத முனிவன் கூறிய படி அப்பாவம் தீரத் தீர்த்தயாத்திரை செய்ய முடிவு செய்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/91&oldid=1036026" இலிருந்து மீள்விக்கப்பட்டது