பக்கம்:மாபாரதம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

95


சுபத்திரை அவனுக்கு ஒர் வீர மகனைப் பெற்றுத் தந்தாள்; அவன்தான் அபிமன்யு என்பவன்.

காண்டவ தகனம்

வறியவர் குறை கேட்டு, வாரி வழங்கிய தருமனின் கொடைச்சிறப்பைப் பயன்படுத்திக் கொண்டு அக்கினி அக்கிரகார வடிவம் கொண்டு அவன் முன் வந்து நின்றான்.

“ஐயா! பார்வை இல்லை” என்று பிச்சைகேட்டுக் கொண்டு உள்ளே ஒரு பாமரனைப்போல நுழைந்தான்.

ஐயர் கேட்டால் இல்லை என்று சொல்லும் துணிவு மேல் அரசகுலத்துக்கு இருந்தது இல்லை.

தருமன் “பசிக்கு உணவு தருகிறோம்” என்றான். வந்தவன் பொறுப்பாக நடப்பான் என்று எதிர்பார்த்தான்; அவன் நெருப்பாய் நிமிர்ந்து நின்றான்.

கேட்டது ஒன்று; வேட்டது வேறாக இருந்தது “காட்டைப் பற்றி எரித்துச் சாம்பல் ஆக்க விரும்புகிறேன்” என்றான்.

“விரும்பியது உண்க” என்றான் அருச்சுனன்.

“மழை பொழிந்து இந்திரன் தீமை இழைப்பான்” என்றான்.

“சரகூடம் அமைப்போம்” என்றான்.

இந்திரன் கொட்டும்மழை கொண்டு அக்கினியை அடக்கப்பார்த்தான்; மொட்டின் வடிவம் உடைய அம்புகளைக் கொண்டு அருச்சுனன் வானத்தில் சரங்கள் அமைத்து மழையைத் தடுத்தான்; கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோவிந்தன் மழையைத் தடுத்தது போல் அரசர் கோவாகிய அருச்சுனன் அமரர் கோவாகிய இந்திரன் தொடுத்த மழையை அம்புகளால் தடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/98&oldid=1048328" இலிருந்து மீள்விக்கப்பட்டது