பக்கம்:மாபாரதம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மாபாரதம்


அந்த வனத்தில் இருந்த மரச்செல்வம் எல்லாம் அழிந்தன: உயிர்கள் எல்லாம் சுருண்டு மடிந்தன. சிங்கம், யானை, புலி, கரடி, மான் இக்கூட்டம் எல்லாம் சாவில் ஒற்றுமை காட்டின. தக்ககன் என்னும் பாம்பு தப்பிப் பிழைத்து குருக்ஷேத்திரத்தை முன்னதாகப் போய் அடைந்தது. அதன் துணைவியாகிய பெண் நாகம் அசுவசேனன் என்னும் குட்டியைக்காக்க அதனை வாயில் விழுங்கிக் காப்பாற்றி வானை நோக்கித் தாவியது. குட்டி என்றும் பாராமல் அம்பு அதனை எட்டியது. வால் அறுப்புண்ட அசுவசேனன் தாயைச் சாவில் இழந்தபின் கன்னனிடம் புகலிடமாக அடைந்து நாகாத்திரமாகச் செயல்பட அவனிடம் வளர்ந்து வந்தது. மயன் என்னும் அசுரத்தச்சன் மட்டும் சரண் அடைந்து உயிர் தப்பினான்.

“கண்ணனும் அருச்சுனனும் தெய்வப்பிறவிகள்; அவர்களை எதிர்த்து தெய்வத் தலைவர்கள் போரிடுவது பயன் இல்லை” என்று அசரீரி கூறியது. மழை நின்றது; காண்டவ வனம் படுகாடு ஆகியது.

அக்கினி விசயனுக்குத் தேரும் படைக்கருவிகள் பலவும் தந்து பாராட்டினான்; அவற்றுள் காண்டீபம் என்னும் வில்லும், எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத் தூணிகள் இரண்டும் தரப்பட்டன. வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றும் தரப்பட்டது.

இராச சூய வேள்வி

காட்டை எரித்து விட்டு நகர் திரும்பிய பாண்டவர்கள் போரிட்ட விண்ண வருக்கு விடை தந்து அனுப்பினர். கரிய நிறச்செம்மல் ஆகிய கண்ணனும் பாண்டவர்களும் இந்திரப்பிரத்த நகரில் வந்து தங்கினர். தப்பிப் பிழைத்த சிற்பநூல் வல்ல அசுரத்தச்சன் ஆகிய மயன் உயிர் அளித்த உத்தமர்களுக்கு உன்னதமான மண்டபம் ஒன்று கட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/99&oldid=1036102" இலிருந்து மீள்விக்கப்பட்டது