பக்கம்:மாயக் கள்ளன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கொண்டே இருப்பான். தேள் கொடுக்கு மாதிரி அவன் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுத்ததால் அவனே எல்லோரும் கொடுக்குக் குப்பன் என்று கூப்பிடுவார்கள். அவன் மாம் பழச் சித்தரைக் கண்டதும் அவருடைய முக்கியமான சீடன் ஆகிவிட்டான். அவரைப் பிடித்துக்கொண்டால் சுகமாகச் சாப்பிட்டுக்கொண்டு ச ந் தே ஷ மாக இருக்காலமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் மாம்பழச்சித்தரை அழைத்துக்கொண்டு வேருேர் ஊருக்குப் போனன். அங்கே போய் மாம்பழச்சித்தரின் சக்தியைப்பற்றி எல்லோரிடமும் விமரிசையாகப் பேசின்ை. அவர் சொன்னல் சொன்னபடி நடக்கும் என்றும் கூறினன். அவன் பேச்சைக் கேட்டதும் பல பேர் மாம்பழச் சித்தரிடம் வந்து, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர்கள். தங்களே ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். அப்படி வருகின்றவர்களுக்கெல்லாம் எதாவது ஓர் அற்புதம் செய்து காண்பிக்கவேண்டும் என்று கொடுக்குக் குப்பன் ஆசைப்பட்டான். சுவாமி, தாங்கள் மாம்பழம் விழ வேண்டும் என்று சொன்னீர்கள் ; உடனே மூன்று மாம்பழங்கள் விழுந்தன. அதைப் போல, இங்கு வருகின்ற மக்களுக்கு முன்னலும் ஏதாவது ஓர் அற்புதம் செய்து காண்பித்தால்தான் அவர்கள் உங்களை மதிப்பார்கள்’ என்று அவன் மாம்பழச் சித்தரிடம் கூறினன். என்ன அற்புதம் செய்யலாமென்று மாம்பழச் சித்தருக்குத் தோன்றவில்லை. சுவாமி, நீங்கள் சொன்னவுடன் ஒரு தட்டிலே தேங்காய் பழம் வரவேண்டும். இந்த அற்புதத்தைச் செய்யுங்கள்’ என்று யோசனை கூறினன் சீடன். மாம்பழச்சித்தர் இந்த அற்புதத்தை முதலில் தமது சீடனுக்கு முன்னல் மட்டும் செய்துபார்க்க முயன்ருர், தேங்காய் பழமே வா’ என்று கூறிக்கொண்டே அவர் கைகளை நீட்டினர். ஆனால், தேங்காய் பழம் வரவில்லே. இதைக் கண்டு மாம்பழச் சித்தர் ஏமாற்றமடைந்தார்; மனம் தளர்ந்தார். ஆனல், கொடுக்குக் குப்பன் மனம் தளரவில்லே. சுவாமி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/111&oldid=867602" இலிருந்து மீள்விக்கப்பட்டது