பக்கம்:மாயக் கள்ளன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 தன்னுடைய மாயவலைக்குள் விழும்படி செய்ய முயல்வான். அவ னுக்கு எத்தனையோ தந்திரங்கள் தெரியும். அந்தத் தந்திரங் களிலே அவனுக்கு உதவி செய்வதற்கு ஐந்து வேடர்கள் இருந்தார்கள். அவர்கள் பொல்லாதவர்கள்; இரக்கமே இல்லாதவர்கள். தங்கள் இஷ்டப்படியே நடப்பவர்கள். மாயக்கள்ளன் யாரிடத்தில் வேண்டுமானாலும் இந்த ஐந்து பேர்களை யும் ஏவிவிடுவான், சந்நியாசியிடத்திலும் தன்னுடைய

நாலேகா (முழுபலத்தையும் செலுத்துவான். இவ்வாறு செய்து ஆத்மரங்கனை ஏமாற்றித் தனது வலைக்குள் போட முயற்சி செய்தான். சந்நியாசியாக உருவமெடுத்த ஆத்மரங்கன் முதல் படியிலே காலெடுத்து வைத்தான். மாபக்கள்ளன் கதையை ஆரம்பித்தான். அந்தக் கதையை ஆத்மரங்கன் நன்றாகக் கேட்டுக்கொண்டே வந்தாலும் அவன் அதிலேயே மூழ்கி விடவில்லை. கதைக்கு மத்தியிலேயே அவன் அடிக்கடி தனது பெற்றோர்களை நினைத்துக்கொண்டான். அவர்களை எப்படியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/118&oldid=1277030" இலிருந்து மீள்விக்கப்பட்டது