பக்கம்:மாயக் கள்ளன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 李 இடுப்பிலே வேட்டியில்லே: ஒரு கெளபீனம் மட்டும் இருந்தது. அவன் அழுதுகொண்டே வந்தான். முனிவரைக் கண்டதும் அவன், 'ஐயா, ஆடெங்கே ? மாடெங்கே ? அவை போட்ட குட்டி எங்கே ?’ என்று நடுங்கிக் கொண்டே கேட்டான். முனிவர் அவனேப் பக்கத்திலே வரும்படி கூறி, அன்போடு, நீ யாரப்பா ?’ என்று விசாரித்தார். அந்தப் பையன் முனிவருடைய கேள்விக்குப் பதில் சொல் லாமல், வீடெங்கே? வேட்டி எங்கே?' என்று மேலும் கேட்டான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து முனிவர் அவனுக்குத் தைரியம் உண்டாகும்படி இனிமையாகப் பேசினர். பையா, பயப்படாதே! உனக்கு நான் எல்லா உதவி யும் செய்கிறேன்’ என்று அவர் சொன்னர். அதல்ை அந்தப் பையனுக்குக் கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. அவன் தனது வீட்டிலிருந்து ஆடுகளையும் மாடுகளையும் அவற்றின் குட்டிகளேயும் மேயவிடுவதற்காகக் காட்டிற்கு ஒட்டிக்கொண்டு வந்திருந்தானம். திடீரென்று ஒரு பெரிய புயல் ஏற்பட்டது. காற்று வேகமாக அடித்தது. காட்டிலிருந்த மரங்களெல்லாம் சடார் சடாரென்று ஒடிந்து விழுந்தன. அதைக் கண்டு ஆடுகளும் மாடுகளும் அவற்றின் குட்டிகளும் பயந்து நாலு திசைகளிலும் ஓடிவிட்டன. பையன் இடுப்பிலே கட்டி யிருந்த வேட்டியும் காற்றிலே போய்விட்டது. ஆடுமாடுகளைத் தேடி அவன் காட்டிலே அங்குமிங்கும் அலேந்து திரிந்தான். கடைசியில் அவனுக்குத் தான் இருக்குமிடம் எதுவென்றே தெரியவில்லை. அவன் வீடு எங்கிருக்கிறதென்றும் தெரிய வில்லை. அவன் மிகவும் பயந்து போனன். அதனல் அவ்வாறு கேள்வி கேட்டுக்கொண்டே முனிவரது ஆச்ரமத் திற்கு வந்து சேர்ந்தான். அவனே எல்லோரும் வேதாந்தம் என்று வேடிக்கையாகப் பெயர் வைத்து அழைப்பார்கள். முனிவர் அவனேக்கொண்டு ஞானமூர்த்தியின் கர்வத்தை அடக்க எண்ணினர். 'தம்பி, பக்கத்து வனத்திலே ஒருவர் இருக்கிருர், அவரிடம் போனல் நீ கேட்கிற கேள்விகளுக்குச் சரியான பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/45&oldid=867699" இலிருந்து மீள்விக்கப்பட்டது