பக்கம்:மாயக் கள்ளன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அவனுக்குப் பொறுக்காது. பலமற்றவர்களுக்கு உதவி செய்ய அவன் தயாராக நிற்பான். இவ்வாறு துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரும்பி அவன் புறப்பட்டான். அவனிடம் ஒரு நல்ல குதிரை இருந்தது. இரத்தம் போலச் சிவப்பான நிறத்தோடு அது பசர்ப்பதற்கு மிக அழகாகக் காட்சியளித்தது. அது காற்றைப் போல வேகமாகப் பாய்ந்து - ஓடும். அதனால் அதற்குச் செங்காற்று என்று விக்கிரமன் பெயர் வைத்திருந்தான்.

விக்கிரமன் செங்காற்றின் மேல் ஏறிக்கொண்டு பல தேசங்களுக்குப் போனான். பல பேருக்கு உதவி செய்தான். கடைசியிலே அவன் ஒரு வனத்திற்குள் நுழைந்தான். வெகு தூரம் அதற்குள்ளே சென்றான். அங்கே மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியிலே, ஒரு பெரிய வெள்ளை மாளிகை தனியாக இருந்தது. யாரும் அங்கே வசிப்பதாகத் தெரியவில்லை. அடர்ந்த வனத்திற்குள்ளே இப்படி ஒரு பெரிய மாளிகையைப் பார்க்க விக்கிரமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குள்ளே யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க ஆசை உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/58&oldid=1276997" இலிருந்து மீள்விக்கப்பட்டது